தற்போது கிரிக்கெட் உலகில் மீண்டும் நான்கு சிறந்த பேட்ஸ்மேன்களில் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது குறித்து பெரிய விவாதங்கள் செல்ல ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட விஷயத்தில் சங்கக்கராவுக்கு அடுத்து இந்திய வீரர் விராட் கோலி தான் எப்பொழுதும் என ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியிருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் அறிமுகமான பிறகு மூன்று வடிவத்திலும் ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக இருப்பது என்பது சவாலான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் தகுந்தபடி மாறிக்கொள்வது பேட்ஸ்மேன்களால் முடியாத காரியமாக இருக்கிறது. இதை சிறப்பாக உலகக் கிரிக்கெட்டில் செய்யக்கூடிய ஒரே பேட்ஸ்மேனாக விராட் கோலி மட்டுமே இருக்கிறார்.
ஜோ ரூட்டால் ஆரம்பித்த விவாதம்
2019 ஆம் ஆண்டு முதல் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் மெஷின் போல ரன்களை குவித்து கொண்டே இருக்கிறார். ஏறக்குறைய அந்த ஆண்டிலிருந்து அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் 17 சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் சச்சின் அடித்துள்ள அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் இருக்கும் ஒரே வீரராகவும் இருக்கிறார்.
இதன் காரணமாக தற்பொழுது மீண்டும் தற்கால கிரிக்கெட்டில் சிறந்த நான்கு வீரர்களின் யார் சிறந்தவர்கள் என்கின்ற விவாதம் ஆரம்பித்துவிட்டது. இது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்று எடுத்துக்கொள்ளும் பொழுது ஜோ ரூட் மட்டுமே நிற்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட் எனும் வரும்பொழுது விராட் கோலிக்கு அருகில் யாருமே கிடையாது.
சங்கக்கராவுக்கு அடுத்து விராட் கோலி
இந்த நிலையில் இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தற்கால கட்டத்தில் சிறந்த நான்கு வீரர்களில் சிறந்தவர் யார் என்பது குறித்து வெளிப்படையான கருத்தை கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியா டெஸ்ட்.. இந்த 6 பேர் பேட்டிங்ல இருப்பாங்க.. ஆனா ஸ்மித்துக்கு அது டவுட் – ஆஸி கோச் பேட்டி
இதுகுறித்து ஏஞ்சலோ மேத்யூஸ் கூறும்பொழுது ” தற்கால கிரிக்கெட்டில் சிறந்த நான்கு வீரர்களின் சிறந்த வீரர் விராட் கோலிதான். ஏனென்றால் சங்கக்கராவுக்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் சீராக ரன்களை தொடர்ந்து அடிக்கக்கூடிய பேட்ஸ்மேனாக விராட் கோலி மட்டுமே இருக்கிறார். எனவே அவர்தான் எல்லோரையும் விட சிறந்த வீரர்!” என்று கூறியிருக்கிறார்.