இந்தியா டெஸ்ட்.. இந்த 6 பேர் பேட்டிங்ல இருப்பாங்க.. ஆனா ஸ்மித்துக்கு அது டவுட் – ஆஸி கோச் பேட்டி

0
911
Smith

ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி எவ்வாறு அமையும் என அந்த அணியின் பயிற்சியாளர் ஆன்ட்ரு மெக்டொனால்ட் பேசியிருக்கிறார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக கடந்த இரண்டு முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. எனவே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடருக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இரு அணி நிர்வாகங்களுமே சிறப்பாக தயாராகி வருகின்றன.

- Advertisement -

கடந்த முறை ஸ்பெஷல்

முதல் முறையாக 2019 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாலில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பொழுது டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அணியில் இல்லை. எனவே அந்த வெற்றி முழுமையானதாக இல்லை என்று சிலரால் வெளியில் பேசப்பட்டது.

இதற்கு பதிலடி தரும் விதமாக இவர்கள் இருவருமே 2011 ஆம் ஆண்டில் இருந்த பொழுது வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, அதே சமயத்தில் முன்னணி வீரர்கள் காயத்தால் விலகி இருந்த பொழுது இந்திய இளம் வீரர்கள் தொடரின் கடைசி போட்டியை வென்று அத்தோடு தொடரையும் வென்று பதிலடி கொடுத்தார்கள். இதுதான் ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது.

- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித் ஓபனரா?

இந்தத் தொடர் குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஆன்ட்ரு மெக்டொனால்ட் “ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக வர வேண்டுமா? என்பதில் எங்களுக்கு நல்ல பார்வை கிடைத்திருந்தாலும் கூட இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தெளிவாக ஸ்மித் துவக்க ஆட்டக்காரராக வராவிட்டால், வேறு யாராவது மேலே செல்ல வேண்டும். அதே சமயத்தில் கிரீன் நான்காவது இடத்தில் நன்றாக விளையாடியிருக்கிறார். எனவே முடிவெடுத்த தாமதமாகிறது.

இதையும் படிங்க : எனக்கு போட்டியே கிடையாது.. இந்திய அணிக்கு ஆட நான் கனவு காணல.. என் பாலிசி இதுதான் – ஆகாஷ் தீப் பேட்டி

எனவே இந்த நேரத்தில் எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. நாங்கள் எங்களுடைய அணியில் உஸ்மான் கவஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேன், கேமரூன் கிரீன், மிட்சல் மார்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் என முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறோம். நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான முறையில் முடித்தார்கள்.எனவேஅவர்கள் இந்த முறையும் சரியாக வருவார்கள் என்று நம்புகிறோம்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -