இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நாளை மறுநாள் விளையாடுகிறது. இந்த நிலையில் இலங்கை அணியில் இருந்து இன்னும் ஒரு நட்சத்திர வீரர் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
நேற்று இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக தற்போதைய அளவில் அதிக விக்கெட் கைப்பற்றிய இலங்கை வீரராக அவர் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால் இடம் பெறாத நிலையில், மேலும் இலங்கையை அணி சொந்த மண்ணில் விளையாடுகின்ற காரணத்தினாலும் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்ல முடியும் என நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல்திறன் இயக்குனர் ஜோபின் பருச்சாவை வைத்து இலங்கை அணியினர் ஆறு நாட்கள் பயிற்சி மேற்கொண்டார்கள். இந்த வகையில் இடைக்கால பயிற்சியாளராக இலங்கை அணிக்கு வந்திருக்கும் லெஜென்ட் சனத் ஜெயசூர்யா இந்திய அணிக்கு எதிரான தொடரை வெல்ல பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார்.
துஷ்மந்த சமீரா காயம் காரணமாக வெளியேறியது அவருடைய திட்டங்களில் பெரிய ஓட்டையை உருவாக்கியது. இந்த நிலையில் மலிங்கா போல ஸ்லிங் ஆக்சன் மற்றும் பந்தை சிறப்பாக வீசும் நுவன் துஷாராவும் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சு யூனிட்டில் தற்பொழுது மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அவர்களுடைய அணியில் இடது கை வேகம் பந்துவீச்சாளர் மதுசங்காவும் இல்லை. தற்பொழுது பதிரனா மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியவராக இருக்கிறார். ஆனால் அவர் புதிய பந்தில் துவக்க ஓவர்களை வீசக்கூடியவர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவுடன் டெஸ்ட்.. வேற மாதிரி தயாராகும் ஆஸ்திரேலியா.. ரோகித் படை சமாளிக்குமா?.. வெளியான தகவல்கள்
இரண்டு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இலங்கை அணியில் காயம் காரணமாக வெளியேறி, பயிற்சியாளர் தனது ஜெயசூர்யாவின் திட்டத்தில் பின்னடைவை உருவாக்கியதோடு, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்!






