ஐஎல் டி20 லீக்.. முன்னாள் ஆர்சிபி வீரர் டி20 கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை.. ரஷீத் கானை முந்தினார்.. முழு விபரம்

0
177

துபாயில் சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் டிசெர்ட் வைப்பர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் வணிந்து ஹசரங்கா டி20 தொடரில் ஒரு உலக சாதனை படைத்திருக்கிறார்.

இவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

துபாய் ஐஎல் டி20 லீக்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று உலகின் பல்வேறு நாடுகளில் பிரான்சிஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியான துபாயில் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 18வது போட்டியில் சார்ஜா வாரியர்ஸ் மற்றும் டிசர்ட் வைப்பர்ஸ் அணிகள் மோதி விளையாடின. இதில் சார்ஜா அணியில் விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கோலர் காட்மோரை வைப்பர் அணியில் விளையாடிய ஹசரங்கா வீழ்த்தினார்.

சுருக்கமாக இதில் முதலில் விளையாடிய ஷார்ஜா வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவிக்க, இந்த இலக்கை நோக்கி விளையாடிய வைபர்ஸ் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. சார்ஜா அணியில் தொடக்க விக்கட்டை வீழ்த்தியதன் மூலமாக ஹசரங்க டி20 கிரிக்கெட்டில் ஒரு உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

வணிந்து ஹசரங்கா படைத்த உலக சாதனை

இதுவரை 209 டி20 போட்டிகளில் விளையாடிய வணிந்து ஹசரங்கா இந்த போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய உலகின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதில் 3 முறை 5 விக்கெட்டுகளையும் 9 முறை 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேட்டிங்கிலும் 235 ரன்கள் குவித்ததோடு 9 அரை சதங்கள் அடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:1 ரன் தாண்டாத 8 பேர்.. 5 பேர் டக் அவுட்.. சூப்பர் கிங்ஸ் அபார பவுலிங்.. 9 விக்கெட்டில் சன் ரைசர்சை வீழ்த்தியது.. எஸ்ஏ டி20

ஆனால் இவருக்கு முன்பாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரூ டை 300 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தாலும் 211 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ரசீத் கான் 213 போட்டிகளில் விளையாடி இந்த மைல் கல்லை அடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹசரங்கா 2021ம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஆர்சிபி அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி இவரை எடுத்தும் விளையாடவில்லை. தற்போது இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -