நம்பர் 1 இந்திய அணியை தோற்கடித்தோம்.. இந்த இந்தியர்தான் எங்க வெற்றிக்கு காரணம் – சனத் ஜெயசூர்யா பேச்சு

0
574
Jayasuriya

இலங்கை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணிக்கு எதிராக கைப்பற்றி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இந்த வெற்றியில் இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் மற்றும் இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவுக்கு பெரிய பங்கு இருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான சிறப்பு வாய்ந்த வெற்றி குறித்து சனத் ஜெயசூர்யா பேசியிருக்கிறார்.

இறுதியாக 1997 ஆம் ஆண்டு சனத் ஜெயசூர்யா இலங்கை அணிக்கு விளையாடிய காலகட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இருந்தது. அதற்குப் பிறகு நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இலங்கை அணி தோல்வி அடைந்து வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தது. டி20 உலகக் கோப்பை தொடரில் மோசமாக தோல்வி அடைந்த காரணத்தினால் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர் வுட் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். இடைக்கால பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா கொண்டுவரப்பட்டார். தற்பொழுது அந்த அணி இது அணிக்கு எதிராக தொடரை வென்றும் இருக்கிறது.

இந்த நிலையில் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கும் சனத் ஜெயசூர்யா கூறும் பொழுது “எனக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல் திறன் இயக்குனர் ஜூபின் பருச்சா கிடைத்தார். (இவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது) அவர் இலங்கை வந்து ஏழு நாட்கள் பயிற்சி கொடுத்தார். இதில் நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் நிலைத்து இன்று நீண்ட நேரம் விளையாடுவது எப்படி என்று கற்றுக் கொண்டோம்.

எங்கள் பேட்ஸ்மேன்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் பேட்டிங் செய்தார்கள். இது பெரிய தன்னம்பிக்கை கொடுத்தது. ஒரு வீரர் ஸ்கோர் போர்டில் ரன்கள் போட்டால், யாரேனும் சிறப்பாகப் பந்து வீசினால், அவர்களுடைய தன்னம்பிக்கையை நாம் அதிகப்படுத்த முடியும். நாள் முடிவில் நாங்கள் உலகின் நம்பர் ஒன் அணியை தோற்கடித்திருக்கிறோம்.

- Advertisement -

தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு பயிற்சியாளரை தேடுகிறது. நான் இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கு இடைக்கால பயிற்சியாளராக வந்திருக்கிறேன். நான் இந்தத் தொடரில் உயர் செயல் திறனுக்கான பயிற்சியாளராக இருந்தேன். ஆனால் நான் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி சொல்வேன். அவர்கள் எங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள்.

இதையும் படிங்க : கம்பீர் அடுத்த முறை நல்ல டீமா கூட்டிட்டு வாங்க.. இதான் அதுக்கு பரிசு – பாகிஸ்தான் தன்விர் அகமத் பேச்சு

இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்காகவும், துணை ஊழியர்களுக்காகவும் தேவைப்பட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்கள். இந்த இளைஞர்களை உயர்நிலைக்கு கொண்டு வெற்றிப்பாதையை தொடர ஒரு நல்ல பயிற்சியாளரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.