இந்திய அணி 27 வருடத்திற்கு பிறகு ரோகித் சர்மா தலைமையில் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்திருக்கிறது. இதை வைத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்விர் அகமத் இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கேலி செய்து பேசியிருக்கிறார்.
இந்திய அணி இலங்கை அணிக்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்தது. இந்தத் தொடர் இந்திய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்கு முதல் தொடராக அமைந்தது.
மேலும் சூரிய குமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியது. கம்பீர் தனது பயிற்சியாளர் பொறுப்பை வெற்றியுடன் மிகவும் சிறப்பாக ஆரம்பித்தார்.
டி20 தொடரில் கம்பீர் அணிக்குள் கொண்டு வந்த பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுத்தது. எனவே கம்பீர் காலம் இந்திய கிரிக்கெட்டில் ஆரம்பித்து விட்டதாக வெளியில் இருந்து நிறைய பாராட்டுகள் சமூக வலைதளங்களில் வந்தன.
இப்படியான நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதைத் தொடர்ந்து திடீரென கம்பீர் திட்டங்கள் மீது இந்திய ரசிகர்களே புகார் சொல்லும் அளவுக்கு நிலைமைகள் மாறி இருக்கிறது.
இப்படியான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமத் இது குறித்து பதிவிட்டதில் “அடுத்த முறை ஒரு நல்ல அணியைக் கூட்டிக் கொண்டு வர இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் கூறுவோம். இலங்கை அணிக்கு எதிரான இந்த தோல்வி கம்பீருக்கு ஒரு நல்ல பரிசு” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : இலங்கை கூட இந்திய அணி தோத்தது கவலை இல்ல.. ஆனா இதுதான் எனக்கு பிரச்சனையா இருக்கு – வாசிம் ஜாபர் கருத்து
இரண்டாம் பகுதியில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை இருந்த பொழுது இந்திய அணியின் கேப்டன் மூன்று போட்டிகளிலும் டாஸ் வெல்ல முடியாமல் போனது பெரிய பின்னாடி ஆக அமைந்திருக்கிறது. ஒரு போட்டியில் டாஸ் வென்று இருந்தால் கூட ஆடுகளம் எப்படி செயல்படுகிறது? என்பதை ஆதாரப்பூர்வமாகக் காட்டி இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.