நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது இலங்கை அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு நியூசிலாந்து நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் இரண்டுக்கு ஒன்று என டி20 தொடரை இழந்தது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகளை தொடர்ந்து தோற்று தொடரை இழந்தது. இன்று மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது.
முடிவை மாற்றிய இலங்கை அணி
இந்த முறை டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஒரு துவக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாடோ 33 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து இன்னொரு ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா அதிரடியாக 42 பந்தில் 66 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் 48 பந்தில் 52 ரன்கள், ஜனித் லியாங்கே 52 பந்தில் 53 ரன்கள், கமீந்து மெண்டிஸ் 71 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
கலக்கிய மூன்று பந்துவீச்சாளர்கள்
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 77 ரன்னுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. அந்த இடத்திலேயே அந்த அணியின் தோல்வி உறுதியாகியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக சாப்மேன் 81 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி கௌரவமாக 150 ரன்கள் எடுத்து 29.4 ஓவரில் சுருண்டது.
இதையும் படிங்க : கம்பீர் சேப்பல் கிடையாது.. அவர மாதிரி இந்த விஷயத்தில் நேர்மையானவர் யாரும் இல்ல – ராபின் உத்தப்பா பேட்டி
இதைத் தொடர்ந்து இலங்கை அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இலங்கை அணியின் பந்துவீச்சில் அஷிதா பெர்னாடோ, மதிஷா தீக்ஷனா மற்றும் யசான் மலிங்கா மூவரும் மிகச் சிறப்பாக ஆரம்பத்திலேயே பந்து வீசி நியூசிலாந்து சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். மேலும் இந்த மூன்று பந்துவீச்சாளர்களும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். நியூசிலாந்து அணி இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று எனக் கைப்பற்றியது.