கம்பீர் சேப்பல் கிடையாது.. அவர மாதிரி இந்த விஷயத்தில் நேர்மையானவர் யாரும் இல்ல – ராபின் உத்தப்பா பேட்டி

0
34
Gambhir

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மிகவும் நேர்மையானவர் என்றும் அவர் கிரேக் சேப்பலின் அணுகுமுறையை பயிற்சியில் கொண்டவர் கிடையாது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.

கம்பீர் பயிற்சியாளராக கண்டிப்பானவர், சீனியர் வீரர்களை ஒதுக்குகிறார் மேலும் அணியில் தன்னுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என விரும்புகிறார் என்று பலவாறான கருத்துக்கள் வெளியில் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அவருடன் இணைந்து கொல்கத்தா அணியில் விளையாடி இருக்கும் ராபின் உத்தப்பா இதை மறுத்திருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் மிகவும் நேர்மையானவர்

இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும்பொழுது “கம்பீர் அணுகுமுறை கிரேக் சேப்பலின் அணுகுமுறை போலவே இருக்கிறது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. கம்பீரைப் போல நேரடியாக பேசும் நபர்களை நான் இதுவரை சந்தித்தது இல்லை. அவர் மிகவும் வெளிப்படையானவர். அவர் எதுவாக இருந்தாலும் உங்களின் முகத்திற்கு நேரே கூறுவார், முதுகுக்கு பின்னாடி பேச மாட்டார். அது உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம் ஆனால் அவர் அப்படித்தான்”

“அவர் என்ன நினைக்கிறாரோ அதை கூறுவார். அதுதான் உங்களுக்கு அவரிடம் இருந்து கிடைக்கும். ஒருவரின் முதுகுக்குப் பின்னால் பேசுவதை விட கம்பீர் போன்ற அணுகுமுறையை கொண்டிருப்பது எவ்வளவோ பரவாயில்லை. என்னுடன் யாரும் நேராக பேசுவதை நான் விரும்புகிறேன். கம்பீர் எப்பொழுதும் நேராக இருக்கக் கூடியவர்”

- Advertisement -

கம்பீர் ரோகித்தை மதிக்கிறார்

“இந்திய அணியுடன் இன்னும் அவருக்கு நல்ல இணைவு ஏற்படவில்லை. பும்ராவுடன் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே ஆஸ்திரேலியா உடன் இருந்தார். பின்பு அதற்கடுத்து சரியான முறையில் சில வீரர்கள் செல்லவில்லை. அவரது பாணி வேலை செய்வதற்கு கொஞ்சம் டைம் எடுக்கலாம். கம்பீர் ரோகித்தை மிகவும் மதிப்பது நாம் பேட்டியில் பார்க்க முடியும். இருவருமே அவரவர் வழியில் தலைவர்கள்”

இதையும் படிங்க : அகர்கர் போட்ட உத்தரவு.. கேஎல் ராகுல் கோரிக்கை நிராகரிப்பு.. ஸ்பெஷல் பிளான் – புதிய தகவல்கள்

“மேலும் கம்பீருக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மூன்று வடிவ கேப்டன் உடன் செயல்படுவது கடினமானதாக மாறுகிறது. இதற்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரோகித் கிடைக்காவிட்டால் இன்னொரு கேப்டன் உடன் அவர் இணைந்து செயல்பட வேண்டியது வரும். அதே சமயத்தில் சூரியகுமார் உடன் இணைந்து அவரை நல்ல கேப்டனாக வெளியில் கொண்டு வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -