107 ரன்.. சுருண்டு ஒயிட் வாஷ் ஆன ஸ்மித்தின் ஆஸி.. குசால் மெண்டிஸ் அசலங்கா அபாரம்.. இலங்கை அணி தொடரை வென்றது

0
772
Australia

இலங்கை அணி தங்கள் சொந்த நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இலங்கை வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது. இதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபிக்கு பயிற்சி பெறும் விதமாக இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது.

- Advertisement -

பேட்டிங்கில் கலக்கிய இலங்கை அணி

இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு பதும் நிசாங்கா 6, கமிந்து மெண்டிஸ் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா சிறப்பாக விளையாடி 70 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்து சிறப்பாக விளையாடிய குசால் மெண்டிஸ் சதம் அடித்து 115 பந்துகளில் 11 பவுண்டரிகள் உடன் 101 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சரித் அசலங்கா 66 பந்தில் 78 ரன்கள், ஜனித் லியோங்கே 21 பந்தில் 32 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

சுருண்ட ஆஸ்திரேலிய அணி

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் 18, மேத்யூ ஷார்ட் 2, ஜாக் பிரேசர் மெக்கர்க் 9, கேப்டன் ஸ்மித் 29, ஜோஸ் இங்லீஷ் 22, ஆரோன் ஹார்டி 0, கிளன் மேக்ஸ்வெல் 1, சீன் அப்போட் 2 ரன்கள் என ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : நீங்க அமிதாப்பச்சனா இருந்தா.. நான் இப்படித்தான்.. ஸ்ரேயாஸ் வேற மாதிரி – சஞ்சய் பாங்கர் பேச்சு

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 24.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரங்கள் மட்டுமே எடுத்து 174 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் வெல்லாலகே 4, அசிதா பெர்னாடோ 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். தங்களை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒயிட் வாஷ் செய்ததற்கு, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒயிட் வாஷ் செய்து இலங்கை அணி பதிலடி கொடுத்திருக்கிறது.

- Advertisement -