நீங்க அமிதாப்பச்சனா இருந்தா.. நான் இப்படித்தான்.. ஸ்ரேயாஸ் வேற மாதிரி – சஞ்சய் பாங்கர் பேச்சு

0
39
Shreyas

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் தன்னம்பிக்கையான வீரர் எனவும் அவருடைய மனப்பாங்கு எப்படி ஆனது என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி முதல் போட்டியில் காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி, தற்பொழுது இந்திய பிளேயிங் லெவனில் நிரந்தர இடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் நீண்டகால பிரச்சனை

ஸ்ரேயாஸ் ஐயர் சுழல் பந்துவீச்சில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த போதிலும் கூட, அவரால் வேகப்பந்து வீச்சில் ஷார்ட் பந்துகளை விளையாடுவதில் தடுமாற்றம் காணப்பட்டது. அதில் அவருக்கு அடிப்படையான தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்தது. இதன் காரணமாக அவரது இந்த பலவீனத்தை பயன்படுத்தி எதிரணிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர் வெளிநாடுகள் செல்லும் பொழுது இந்திய அணியில் வாய்ப்பை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இப்படியான நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்ட வகை பந்தில் இருந்த பலவீனத்தை மாற்றி அமைத்து தற்போது மிகவும் சிறப்பான முறையில் அப்படியான பண்புகளை விளையாடினார். இதனால் அவருக்கு ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்தது. அவருடைய ஆட்டமும் அதிரடியாக மாறியது. இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் அவர் இழந்த இடத்தையும் மீண்டும் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது.

- Advertisement -

நீங்கள் அமிதாப் பச்சனாகவே இருங்கள்

தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் குறித்து பேசி இருக்கும் சஞ்சய் பாங்கர் நீங்கள் அமிதாபச்சன் என்றால் நான் மனோஜ் பாய்ஜ்பாய். இப்படித்தான் மற்றவர்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் எப்பொழுதும் சொல்வார். அவர் மிகவும் தன்னம்பிக்கையானவர். தன்னை மிகவும் நம்பக்கூடியவர். அவர் நடந்து கொண்டிருக்கும் விதம் அவருக்கு தன்னம்பிக்கை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது”

இதையும் படிங்க : இனி ஐபிஎல் இலவசமாக பார்க்க முடியாது.. இணைந்த ஜியோ ஹாட்ஸ்டார்.. வெளியான புதிய அறிவிப்பு

“முன்பு அவர் ஷார்ட் பந்தை ஆப் சைடில் விளையாடுவார். இப்பொழுது அவர் அப்படி செய்வதில்லை. தற்பொழுது ஆன் சைடுக்கு அப்படி ஆன பந்துகளை குறி வைக்கிறார். மேலும் தன்னால் அடிப்பதற்கு கடினமாக இருக்கும் ஷார்ட் பந்துகளை சிங்கிள் ரன்னுக்கு விளையாடுகிறார். இதனால் அவர் சிறப்பான முறையில் மாறி வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -