வெறும் 72 ரன்.. 5 ஓவரில் பாகிஸ்தான் அணியை வென்று இலங்கை சாம்பியன்.. ஹாங்காங் சிக்ஸஸ் 2024

0
220
Srilanka

தற்போது ஹாங்காங்கில் நடைபெற்று வந்த ஹாங்காங் இன்டர்நேஷனல் சிக்ஸஸ் தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சர்வதேச அணிகள் பங்கு பெற்ற ஆறு வீரர்கள் மற்றும் ஆறு ஓவர்கள் கொண்டு நடத்தப்படும் ஹாங்காங் இன்டர்நேஷனல் சிக்ஸஸ் நடைபெற்று வந்தது. இதில் இந்திய அணி கால் இறுதியில் தோற்று வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கை அணி பாகிஸ்தான் அணி அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறது.

- Advertisement -

கடிவாளம் போட்ட இலங்கை அணி

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமத் அக்லாக் 20 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். ஆசிப் அலி 0, ஹூசைன் தலாத் 1, கேப்டன் பாகிம் அஷ்ரப் 13, அமீர் யாமின் 6, சகாப் கான் 1 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத்தொடர்ந்து 5.2 ஓவரில் பாகிஸ்தான் அணி மொத்த ஆறு விக்கெட்டுகளையும் இழந்து, முழுமையாக ஆறு ஓவர்களை விளையாட முடியாமல் 72 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. தனஞ்செய லக்சன் மற்றும் தரிந்து ரத்நாயகே தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு கடிவாளம் போட்டார்கள்.

- Advertisement -

சாம்பியன் ஆன இலங்கை

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர் சன்டன் வீராக்கோடி 13 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 34 ரன்கள், கேப்டன் லகிரு மதுசங்கா 5 பந்தில் 19 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கினார்கள்.

இதைத்தொடர்ந்து களத்தில் நின்ற தரிந்து ரத்நாயகே 4 பந்தில் 16 ரன்கள் எடுத்து இலங்கை அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற வைத்தார். இலங்கை அணி வெறும் ஐந்து ஓவர்களில் இலக்கை எட்டி, நடப்பு ஹாங்காங் இன்டர்நேஷனல் சிக்ஸஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது.

இதையும் படிங்க : நான் மோசமான ஷாட் ஆடினதுக்கு வருத்தப்படல.. ரிஷப்க்கு தப்பா அவுட் கொடுத்தாங்க – ரோகித் சர்மா பேட்டி

இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பெரிய வெற்றிகள் எதுவும் பெறாமல் ராபின் தலைமையில் விளையாடி ஏமாற்றம் அளித்தது. மேலும் கால் இறுதி போட்டியிலும் மோசமாக விளையாடி தோற்று வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -