நான் மோசமான ஷாட் ஆடினதுக்கு வருத்தப்படல.. ரிஷப்க்கு தப்பா அவுட் கொடுத்தாங்க – ரோகித் சர்மா பேட்டி

0
567
Rohit

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் மோசமான வரலாற்று தோல்வி அடைந்திருக்கிறது. இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக ஒரு முறை கூட தோற்றது கிடையாது. இப்படியான நிலையில் முதல்முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி முழுமையாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்து மோசமான வரலாற்றை படைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த தோல்வி எளிதானது இல்லை

இது குறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது “இது மிகவும் கடினமானது இது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. வாழ்க்கையில் எதுவுமே எளிதானது இல்லை என்பதை இது கூறுகிறது. ஒரு நாள் நீங்கள் மேலே இருக்கிறீர்கள் இன்னொரு நாள் நீங்கள் கீழே இருக்கிறீர்கள். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிகவும் மோசமான தோல்வியாக இருக்கும். இதற்கான பொறுப்பை ஒரு கேப்டனாக நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்”

“நியூசிலாந்து எங்களை விட சிறப்பாக விளையாடியது. அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறையிலும் எங்களை விட சிறப்பாக இருந்தார்கள். இது ஒரு கடினமான சவால் என்று எங்களுக்கு தெரியும். எங்கள் அணியின் மூத்த வீரர்கள் ரங்கள் எடுக்காதது கவலையாக இருக்கிறது. ஆனால் அடுத்து ஆஸ்திரேலியா சென்று சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. அதற்கு ஒரு வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் இப்போது அதில் கவனம் செலுத்துவோம்”

- Advertisement -

மோசமான ஷாட்டுக்கு வருத்தப்படவில்லை

“நான் ஒரு மோசமான ஷாட் விளையாடினேன் ஆனால் நான் அதற்காக வருத்தப்படவில்லை. கடந்த காலங்களில் அது எனக்கு நிறைய வெற்றி கொடுத்திருக்கிறது. மேலும் என்னுடைய தற்காப்பு ஆட்டத்தில் நான் நம்பிக்கை இழக்கவில்லை. நான் கொஞ்சம் கூடுதல் நேரம் நின்று விளையாட வேண்டும். கடந்த இரண்டு தொடர்களில் மட்டுமே நான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை ஒரு பேட்ஸ்மேனாக நான் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் சர்ச்சை அவுட்.. நான் இதுக்கு தான் பயந்தேன்.. எங்க அந்த டெக்னாலஜி.? – ஏபி டிவில்லியர்ஸ் விமர்சனம்

“ரிஷப் பண்ட் அவுட் விவகாரத்தில் உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை என்றால், கள நடுவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் அதன் அடிப்படையில் செல்ல வேண்டும். ஆனால் உறுதியான ஆதாரம் இல்லாத பொழுதும் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சரியானது இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் ரிஷப் பண்ட் விளையாடும் பொழுது அவர் வெல்ல வைப்பார்” என்று உணர்ந்தேன் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -