தற்போது இலங்கையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என இலங்கை அணி இடம் இருந்தது. இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஆட்டக்காரர்கள் அலிக் ஆதனஸ் 20 பந்தில் 10 ரன்கள், பிரண்டன் கிங் 25 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த கேசி கார்தி 58 பந்தில் 37 ரன்கள், கேப்டன் ஷாய் ஹோப் 13 பந்தில் 5 ரன்கள்எடுத்து வெளியேறினார்கள்.
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரூதர்போர்டு 82 பந்தில் 74 ரன்கள், ரோஸ்டன் சேஸ் 33 பண்டில் 33 ரன்கள் எடுத்து களத்தில் நின்ற பொழுது, வெஸ்ட் இண்டீஸ் 38.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நேரத்தில் மழை வந்த காரணத்தினால் போட்டி நிறுத்தப்பட்டது. பிறகு இலங்கை அணிக்கு 37 ஓவரில் 232 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. வனிந்து ஹசரங்கா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்னாடோ 7 பந்தில் 5 ரன், குசால் மெண்டிஸ் 8 பந்தில் 13 ரன், சமரவிக்கிரமா 12 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து இலங்கை அணி நெருக்கடியில் சிக்கியது.
இந்த நிலையில் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா மற்றும் கேப்டன் சரித் அசலங்கா ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அதிரடியாக 109 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தது. நிசான் மதுஷ்கா 54 பந்தில் 69 ரன்கள், கேப்டன் சரித் அசலங்கா 71 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க: 158 ரன்.. மகளிர் டி20 உலக கோப்பை பைனல்.. நியூசிலாந்து சாம்பியன்.. தென் ஆப்பிரிக்கா தொடர் சோகம்
இதற்கு அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 21 பந்தில் 30* ரன்கள், ஜனித் லியாங்கே 18 பந்தில் 18* ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 31.5 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 234 ரங்கன் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மழை வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிக ஸ்கோர் சாதகத்தை ஏற்படுத்தி தந்தும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.