இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மழையால் பாதிக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தற்போது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்தது. இந்த நிலையில் இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.
அவிஷ்கா பெர்னாடோ – குசால் மெண்டிஸ் அசத்தல்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கையில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 10 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாடோ மற்றும் குசால் மெண்டிஸ் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு அதிரடியாக 215 பந்துகளில் 26 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
சிறப்பாக விளையாடிய அவிஷ்கா பெர்னாடோ 115 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 100 ரன்ன்கள், குசால் மெண்டிஸ் 128 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 143 ரன்கள் எடுத்தார்கள். கேப்டன் அசலங்கா 28 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 49.3 ஓவரில் ஐந்து 324 ரன்கள் எடுத்திருந்தபோது மழை வந்து குறுக்கிட்டது. அத்துடன் இலங்கை எண்ணிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட் கைப்பற்றினார்.
மாற்றி அமைக்கப்பட்ட ஓவர் மற்றும் ரன்கள்
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் வில் யங் 46 பந்தில் 48 ரன்கள், டிம் ராபின்சன் 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். பிரேஸ்வெல் ஆட்டம் இழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு இந்த பிரச்சனை மட்டும் இல்லன்னா.. ஆஸியை 4-0 ஜெயிக்கும்னு அடிச்சு சொல்வேன் – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி
நியூசிலாந்து அணி 27 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணிஇறுதியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் பந்துவீச்சில் தில்சன் மதுஷ்கா 3, தீக்ஷனா மற்றும் அசலங்கா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.