இந்திய அணிக்கு இந்த பிரச்சனை மட்டும் இல்லன்னா.. ஆஸியை 4-0 ஜெயிக்கும்னு அடிச்சு சொல்வேன் – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி

0
183

இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை வென்று தனது திறமையை சிறப்பாக வெளி உலகத்திற்கு நிரூபித்தது.

இந்த சூழ்நிலையில் வருகிற 22ஆம் தேதி முதல் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடப் போகும் டெஸ்ட் தொடர் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-2025

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை வருகிற 22 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் விளையாட இருக்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா மைதானங்களில் கடந்த இரண்டு முறையும் இந்திய அணி முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் தனது திறமையை நிரூபித்தது.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று இந்திய முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்திய அணிக்கு மற்றொரு முக்கிய பிரச்சனையாக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இல்லாமல் டெஸ்ட் தொடரில் விளையாடுவது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் முக்கிய பிரச்சனை

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேகர் கூறும் போது “4-0 என்று கூறுவது ஒரு தொலைதூரக் கனவு. முதல் அடி எடுத்து வைக்கும் அந்த நேரத்தில், முதல் இரண்டு அடிகள் கடினமானதாக இருக்கும். இந்திய அணிக்கு பெர்த் மற்றும் அடிலெய்டில் நடக்க இருக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மிகவும் கடினமானதாக உணர்கிறேன். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி திரும்பவும் பேட்டிங் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது மிகவும் அவசியம்.

இதையும் படிங்க:கோலியை விமர்சனம் பண்ணாதீங்க.. நான் நேர்ல பாத்தேன்.. ஆஸில இரக்கமே இல்லாம இதை செஞ்சிருக்காரு – சுரேஷ் ரெய்னா பேட்டி

தற்போது ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களின் சிறந்த பலமாக இருந்தது பந்துவீச்சு. இந்த முறை முகமது ஷமியை தவறவிட்டது தான் இந்தியாவின் பிரச்சனையாக உணர்கிறேன்” என்று கூறி இருக்கிறார். எனவே இந்திய அணி ஆஸ்திரேலியாலில் மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் வெற்றி வெற்றி வரலாறு படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியிடமிருந்து கோப்பையை கைப்பற்ற மிகத் தீவிரமாக தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -