இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்று விட்டு அதற்கு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 4, அவிஷ்கா பெர்னாடோ 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து குசால் மெண்டிஸ் 19, கமிந்து மெண்டிஸ் 5, ஜனித் லியாங்கே 11 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். இலங்கை அணி 55 ரன்னுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.
இதற்கு அடுத்து ஒரு முனையில் தனியாளாய் போராடிய இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 126 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 127 ரன்கள் குவித்தார். அவருடைய அதிரடியான பேட்டிங் காரணமாக இலங்கை அணி 46 ஓவர் வரையில் தாக்குப்பிடித்து 214 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் சீன் அப்பாட் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 0, ஜாக் பிரேசர் மெக்கர்க் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்தடுத்து கூப்பர் கான்னோலி 3, கேப்டன் ஸ்மித் 12, லபுசேன் 15, அலெக்ஸ் கேரி 41, சீன் அப்பாட் 20 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதையும் படிங்க : விராட் தவான் மெகா சாதனையை உடைத்த கில்.. ஜோ ரூட் சாதனை சமன்.. அகமதாபாத்தில் அசத்தல் பேட்டிங்
இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதைத் தொடர்ந்து இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மதிஷா தீக்ஷனா இலங்கை பந்துவீச்சில் நான்கு விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.