SLvsAFG.. 12 பந்து 14 ரன்.. சிஎஸ்கே பதிரனா 153கி.மீ.. மாஸ் திரில் போட்டியின் எதிர்பாராத முடிவு

0
297
Pathirana

இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான அணி அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி இன்று தம்புலா மைதானத்தில் நடைபெற்றது. போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ரஷீத் கான் மற்றும் முஜீப் இருவரும் இடம் பெறவில்லை.

- Advertisement -

பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஷாங்கா 6, குஷால் மெண்டிஸ் 10, தனஞ்செய டி சில்வா 24, சமரவிக்கிரமா 25, சரித் அசலங்கா 3, அஞ்சலோ மேத்யூஸ் 6, சனகா 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்ற கேப்டன் வனிந்து ஹசரங்கா பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி 32 பந்தில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 67 ரன்கள் குவித்தார். இலங்கை அணி 19 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பரூக்கி 3, நவீன் உல் ஹக் 2, அசமத்துல்லா ஓமர்சாய் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் 13, குல்பதின் நைப் 16, அசமத்துல்லா ஓமர்சாய் 2, முகமது நபி 9, நஜிபுல் ஜட்ரன் 0, கரீம் ஜன்னத் 20, கியாஸ் அகமத் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

ஒரு முனையில் இப்ராஹிம் ஜட்ரன் அரைசதம் கடந்து நின்றார். அவருடன் அப்போது பேட்டிங் செய்ய வந்த நூர் அகமது இருந்தார். இந்த நிலையில் இரண்டு ஓவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி வெற்றிக்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆப்கானிஸ்தான அணி அப்பொழுது ஏழு விக்கெட்டை இழந்து இருந்தது.

19ஆவது ஓவரை வீச வந்த மதிஷா பதிரனா ஏற்கனவே மூன்று ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இந்த நிலையில் மூன்றாவது ஓவரை வீசிய அவர் மூன்றே ரன்கள் மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் கையில் இருந்து வந்த பந்துகள் சராசரியாக 147 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தன. அதிகபட்சமாக 153 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார்.

இதற்கு அடுத்து இருபதாவது ஓவரில் ஒரு விக்கெட் கைவசம் இருக்க வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை பினூரா வீச, அந்த ஓவரின் முழுமையாக எதிர்கொண்ட கேப்டன் இப்ராஹிம் ஜட்ரனால் முதல் ஐந்து பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த இடத்திலேயே ஆப்கானிஸ்தான அணி தோல்வி அடைந்து விட்டது. கடைசிப் பந்தில் ஆறுதலாக பவுண்டரி வர, இலங்கை அணி இறுதியாக நான்கு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வால் சூப்பர் ஸ்டார்.. ஆனா அந்த பெருமை எங்களுக்குதான்” – பென் டக்கெட் வித்தியாச பேச்சு

இறுதிவரை களத்தில் நின்ற இப்ராகிம் ஜட்ரன் 55 பந்தில் 67 ரன்கள் எடுத்தார். இலங்கைத் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய மதிஷா பதிரனா நான்கு ஓவர்களுக்கு 24 ரன்கள் மட்டுமே தந்து நான்கு விக்கெட் முக்கிய நேரத்தில் கைப்பற்றி இலங்கை அணியை வெல்ல வைத்தார்.