இலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுகிறது. இந்தத் தொடர்களுக்கான அட்டவணை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்க்கலாம்.
இலங்கை நியூசிலாந்து அணிகள் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன.
நியூசிலாந்த அணி இந்தியா வருவதற்கு முன்பாக இலங்கையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இரண்டு போட்டிகளையும் படுமோசமான முறையில் தோற்றது. இதன் காரணமாக இந்தியாவில் வெற்றி பெற்ற பொழுதும் அந்த அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கடினமாகவே இருக்கிறது.
எனவே தற்பொழுது நடைபெற இருக்கும் வெள்ளைப் பந்து தொடர்களில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடர் தோல்விக்கு இலங்கை நியூசிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என கிரிக்கெட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இன்று இரவு ஏழு மணிக்கு தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியும் இதே மைதானத்தில் நவம்பர் 10ம் தேதி அதாவது நாளை நடைபெறுகிறது. இரண்டு போட்டிகளும் அடுத்தடுத்த விடுமுறை நாளில் நடைபெற்று முடிவுக்கு வருகிறது.
இதைத்தொடர்ந்து முதல் ஒரு நாள் போட்டி நவம்பர் 13-ஆம் தேதி தம்புல்லா மைதானத்திலும், அதற்கடுத்த இரண்டு போட்டிகள் நவம்பர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் பல்லகலே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க : சாம்சன் செஞ்சது சாதாரண விஷயம் இல்ல.. இப்ப அந்த கேள்வியை வேற கேட்டிருக்காரு – பாக் அகமத் சேஷாத் பாராட்டு
இலங்கை நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் இந்த வெள்ளைப்பந்து தொடர்களை இந்தியாவில் சோனி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் சோனி லைவில் பார்க்கலாம். மேலும் ஃபேன்கோடு அப்ளிகேஷன் மற்றும் அதன் வெப்சைட்டிலும் பார்க்கலாம்.