6 நாட்கள் டெஸ்ட் போட்டி.. 23 வருடம் கழித்து.. இலங்கை நியூசிலாந்து அணிகள் மோதல்.. வெளியான காரணம்

0
170
Srilanka

தற்போது இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு அடுத்து சொந்த நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவணையில், முதல் டெஸ்ட் போட்டி ஆறு நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஆறு நாட்கள் டெஸ்ட் போட்டி

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாக இருந்த காலங்களும் இருக்கிறது. நடுவில் ஞாயிற்றுக்கிழமை வந்தால் அந்த நாளை டெஸ்ட் போட்டியின் ஓய்வாக அறிவித்துவிட்டு அதற்கான திங்கள்கிழமை தொடர்ந்து அந்த டெஸ்ட் போட்டி நடைபெறும்.

மேலும் சமீபத்தில் 2008 ஆம் ஆண்டு டாடாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆறு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடியது. காரணம் அப்போது அவர்களது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

23 வருடங்களுக்குப் பிறகு அரிய நிகழ்வு

இலங்கை அணி 2001ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இப்படியான ஆறு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியிருக்கிறது. இலங்கையில் அப்பொழுது முழு நிலவு திருவிழாவான போயா திருவிழா நடைபெற்ற பொழுது அந்த குறிப்பிட டெஸ்ட் போட்டியில் நடுவில் ஒரு நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : 7 விக்கெட் 76 ரன்.. சொல்லி சாதித்த சாய் கிஷோர்.. அகர்கருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்.. புச்சி பாபு 2024

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த நாட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் ஆறு நாட்கள் நடக்கிறது. செப்டம்பர் 21 ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதால் அந்த நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -