தற்போது நியூசிலாந்துக்கு வெள்ளைப் பந்து தொடர்கள் விளையாடுவதற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இரண்டாவதாக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பாக நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது. ஆனால் நியூசிலாந்து அணியை தங்களது சொந்த மண்ணில் சிறப்பான முறையில் விளையாடிய இலங்கை அணி மொத்தமாக வீழ்த்தியது.
ஐபிஎல் அன் கேப்ட் வீரர்
இந்த வருடம் ஐபிஎல் மெகா ஏலத்தில் இலங்கையை சேர்ந்த அன் கேப்ட் வேகப்பந்துவீச்சாளர் எசான் மலிங்கா 1.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இவர் ஏற்கனவே சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கிலும் பார்ல் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பாகவே இதற்கு தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நியூசிலாந்து அணி இலங்கையில் கடைசியாக படுதோல்விகளை சந்தித்த காரணத்தினால், தங்களது சொந்த மண்ணில் அதற்கான பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. அதே சமயத்தில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த முறையில் எழுச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
திரும்பி வரும் முக்கிய வீரர்
சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடாத வனிந்து ஹசரங்கா இந்த முறை ஒரு நாள் அணிக்கு மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். மேலும் அவர்களுடைய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த வலிமையான அணியாக இளைஞர் அணி இருக்கிறது.
இதையும் படிங்க : விராட் கோலி பலவீனத்தை பற்றி அவர் கிட்ட பேசினீங்களா?.. ரோகித் சர்மா தந்த அசத்தல் பதில்
இலங்கை ஒருநாள் அணி : சரித் அசலங்க (கே), பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, சமித் குமார், சமிது விக்ரமா, சமிது விக்ரமா, சமித் குமார் மற்றும் எஷான் மலிங்கா.






