இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பில் விராட் கோலியின் பேட்டிங் பலவீனம் குறித்த கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் பதில் அளித்து இருக்கிறார்.
நாளை மறுநாள் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. நாளை விடுமுறை தினம் என்கின்ற காரணத்தினால் போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
விராட் கோலியின் தனிப்பட்ட பலவீனம்
தற்போது மாடர்ன் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக பார்க்கப்படுகின்ற விராட் கோலிக்கு கடந்த சில வருடங்களாக ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் வீசப்படுகிற பந்தில் பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர் தொடர்ந்து ஆட்டம் இழந்து வருகிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அவர் இதே முறையில் ஆட்டம் இழந்து வருவது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் விராட் கோலியின் பலவீனம் பற்றி அவரிடம் பேசினீர்களா? என்று ரோகித் சர்மாவிடம் கேள்வி வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா ” நீங்கள் தான் விராட் கோலியை மாடர்ன் டே கிரிக்கெட்டின் கிரேட் என்று கூறியிருக்கிறீர்கள். எனவே மாடர்ன் டே கிரிக்கெட்டின் கிரேட் வீரருக்கு தன் பிரச்சினைகளுக்கான வழியை தானே கண்டறிந்து கொள்ள தெரியும். தனது குறித்து அவரிடம் பேசவில்லை என்று தெரிவித்திருக்கிறார்”
பிளேயிங் லெவன் எப்படி அமையும்?
இது குறித்து பதில் அளித்த ரோகித் சர்மா பேசும் பொழுது “விக்கெட்டில் எவ்வளவு புள் இருக்கிறது? எங்களுக்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்களா? என்று நாங்கள் பார்க்க வேண்டும். எங்களுக்கு இன்று பயிற்சி இருக்கிறது நாளை கிறிஸ்துமஸ் விடுமுறை. கிரவுண்ட்ஸ்மேன்கள் கூட நாளை மைதானத்தில் இருக்க மாட்டார்கள். எனவே நாங்கள் விக்கெட்டை சரிபார்த்த பிறகு முடிவு செய்வோம்”
இதையும் படிங்க : 18 வருடங்களுக்குப் பிறகு முதல் முறை.. பாக் டெஸ்ட் தொடர்.. அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி.. புதிய திறமை அறிமுகம்
“வழக்கமாக இங்கு விளையாடிய இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளில் புல் பெரிய அளவில் ஆடுகளத்தில் இல்லை. விக்கெட் கொஞ்சம் உலர்ந்து காணப்பட்டிருந்தது. ஆனால் இப்போது எனக்கு அப்படி விக்கெட் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் விக்கெட்டை பார்த்து அதற்கேற்ற கலவையை தேர்வு செய்து போட்டியை சந்திப்போம்” என்று கூறி இருக்கிறார்.






