2025 ஆசிய கோப்பை.. இலங்கை அணி அறிவிப்பு.. 2 பழைய கைகள் சேர்ப்பு.. சவால் தரும் செலக்சன்

0
134
SL

அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு எமிரேடில் துவங்கும் ஆசியக் கோப்பை டி20 தொடருக்கு சரித் அசலங்கா தலைமையில் இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணி எல்லா வகையிலும் இந்திய அணிக்கு சவால் வகையில் இருக்கிறது. மேலும் அணிக்கு மிக முக்கியமான பழைய இரண்டு ஆல்ரவுண்டர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இலங்கை அணி கூடுதல் வலிமை பெறுகிறது.

- Advertisement -

ஹசரங்கா பிரச்சனை

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணியில் ஹசரங்கா பெயரும் இடம் பெற்ற இருக்கிறது. அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடை பகுதியில் காயமடைந்து இதுவரையில் குணமடையவில்லை. இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக துவங்கும் ஒரு நாள் தொடரிலும் அவர் இடம் பெறவில்லை.

அவர் காயம் குணமடையாத பொழுதிலும் அவரது திறமையை கருத்தில் கொண்டு அவருடைய பெயர் ஆசியக் கோப்பை இலங்கை அணியில் இடம் பெற்று இருக்கிறது. யுஏஇ சூழ்நிலைக்கு அவருடைய பந்துவீச்சு முக்கியமானதாக இருக்கும். ஆசியக் கோப்பையில் அவர் குணமடைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

- Advertisement -

இரண்டு ஆல்ரவுண்டர்கள் வருகை

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் முன்னாள் கேப்டன் சனகா மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவருடன் சேர்ந்து இவர் அணியில் விளையாடிய இன்னொரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சமிக்கா கருணரத்தினே சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்.

இத்துடன் இலங்கை அணியின் பலமாக குசால் மெண்டிஸ், பதும் நிஷாங்க்கா, குசால் பெரேரா, கமிந்து மெண்டிஸ், மதிஷா தீக்ஷனா, மதீஷா பத்திரனா போன்ற வீரர்களும் இடம் பெற்று இருக்கிறார்கள். இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பில் இருக்கும் அணியாகவே இருக்கிறது.

இதையும் படிங்க : புதிய பிரான்கோ உடல் தகுதி டெஸ்ட் கொண்டு வந்ததே.. ரோகித்த துரத்ததான்..பிளான் போட்டது இவர்தான் – மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

இலங்கை அணி: சரித் அசலங்க (C), குசல் மெண்டிஸ் (WK), பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, கமில் மிஷார, தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லலகே, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, மதிஷா பத்திரனா, நுவன் துசாரா, துஷ்மந்திர சமீரா மற்றும் பினூரா பெர்னாடோ.

- Advertisement -