3 பார்மெட்டுக்கும் ஒரே கோச்.. காரணம் கம்பீர் சொன்ன அந்த விஷயம் தான்.. என்னால தடுக்க முடியல – ஜெய் ஷா விளக்கம்

0
84

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக விளங்கி வரும் கௌதம் கம்பீர் இந்தியாவின் மூன்று வடிவத்தொடர்களுக்கும் கம்பீர் மட்டுமே பயிற்சியாளராக திகழ்கிறார்.

இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் சிவப்பு பந்து மற்றும் வெள்ளை பந்து என இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கும் நிலையில் இந்தியா மட்டும் ஒரே பயிற்சியாளரை ஆதரிப்பதற்கான காரணத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகினார். அவருக்கு அடுத்ததாக பல்வேறு நேர்காணல்களுக்கு பிறகு இந்தியாவின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவரது தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய இந்திய அணி டி20 தொடரை வென்றும் ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்தும் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.இந்த சூழ்நிலையில் மற்ற சர்வதேச நாடுகள் இரண்டு பயிற்சியாளரை வைத்திருக்க இந்திய அணி மட்டும் பாரம்பரியமாக ஒரே பயிற்சியாளரை மட்டும் ஆதரிப்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் நியமிக்கும் பயிற்சியாளரின் கருத்தை கேட்க வேண்டும். நாங்கள் கௌதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் மூன்று வடிவத்தொடர்க்கும் பயிற்சியாளராக இருக்க ஆர்வமாக இருந்தால் ‘நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொடருக்கு மட்டும் பயிற்சி அளிக்க முடியாது என்று சொல்லி என்னால் எப்படி தடுக்க முடியும்’. அது மட்டுமல்லாமல் 70 சதவீத இந்திய வீரர்கள் மூன்று வடிவ தொடரிலும் விளையாடுகிறார்கள்.

அதனால் இது அவசியமற்றதாகவே நினைக்கிறேன். மேலும் பயிற்சியாளர் குழு குறித்துக் கூறினால் எங்களிடம் என்சிஏவில் இருந்து பயிற்சியாளர்கள் உள்ளனர். ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு எடுக்கும் பட்சத்தில் விவிஎஸ் லட்சுமணன் தற்போதைய பயிற்சியாளராக அடி எடுத்து வைப்பார்” என்று கூறி இருக்கிறார். அதாவது ஒரு பயிற்சியாளர் ஓய்வு பெற விரும்பினால் அதற்கு மாற்று பயிற்சியாளர்கள் இந்திய அணியின் வசம் உள்ளதாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:பேட்டிங் பண்ணது போதும் கிளம்புங்க.. அவுட் ஆகாமலே பாக் வீரர் இமாத் வாசிமுக்கு நடந்த அவமானம்.. இங்கிலாந்து 100 பந்து தொடர்

இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் மெக்கல்லம் நான் டெஸ்ட் தொடரின் பயிற்சியாளராகவும் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் வெள்ளைப் பந்து பயிற்சியாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல பாகிஸ்தான் அணியில் ஜேசன் கில்லஸ்பி டெஸ்ட் வடிவ பயிற்சியாளராகவும் கேரி கிர்ஸ்டன் வெள்ளைப் பந்து பயிற்சியாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -