வெறும் 16 ஓவர்.. இலங்கை பைனலுக்கு தகுதி.. பாகிஸ்தான் அணி வெளியேறியது.. எமர்ஜிங் ஆசியா கப் 2024

0
257
Srilanka

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இன்று நடைபெறும் இரண்டு அரை இறுதி போட்டிகளில் முதல் அரை இறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இரண்டாவது அரை இறுதியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

- Advertisement -

தனியாளாக போராடிய பாகிஸ்தான் ஓபனர்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தைரியமாக தேர்வு செய்தது. ஆனால் பேட்டிங் செய்ய முடிவு எடுத்ததற்கு அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர் ஒமைர் யூசுப் தவிர ஒரு பேட்ஸ்மேன் கூட சராசரி பங்களிப்பை தரவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணிக்கு தனியாளாக பேட்டிங்கில் போராடிய ஒமைர் யூசுப் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் குவித்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமந்தா நான்கு ஓவர்களில் 21 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இந்த தொடர் முழுக்க இவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

16 ஓவரில் வென்ற இலங்கை அணி

இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் யசோதா லங்கா 10 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லகிரு உதாரா 20 பந்தில் 43 ரன்கள், மூன்றாவது இடத்தில் வந்த விக்கிரமசிங்கே ஆட்டம் இழக்காமல் 46 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : கடைசி 3 விக்கெட்.. 167 ரன்கள்.. மாஸ் காட்டிய பாகிஸ்தான்.. இங்கிலாந்து அணிக்கு தொடரை இழக்கும் நெருக்கடி

இலங்கை அணி இறுதியாக 16.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்து இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதியில் வெல்லும் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணி இறுதிப் போட்டியில் விளையாடும்.

- Advertisement -