நாளை துவங்கும் இலங்கை நியூசிலாந்து டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி கனவை பாதிக்குமா?

0
1285
WTC

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டம் தற்பொழுது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக தற்பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் தற்பொழுது இந்தியாவில் விளையாடி வரும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் தற்பொழுது 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன!

- Advertisement -

இந்தத் தொடரில் முதலில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசமாகியது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்கின்ற நிலை இருந்தது. இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று பலர் கணித்திருக்க ஆஸ்திரேலியா அணி எதிர்பாராத விதமாக வென்று தகுதி பெற்றது.

நாளை மறுநாள் அகமதாபாத்தில் துவங்க உள்ள தொடரின் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ட்ரா இல்லை வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலை இருக்கிறது. இல்லையென்றால் நாளை இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் துவங்கும் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரின் முடிவை எதிர்பார்த்து இந்திய அணி காத்திருக்க வேண்டும்.

- Advertisement -

தற்பொழுது ஆஸ்திரேலியா 68.52 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி 60.29 புள்ளிகளுடன் இருக்கிறது. இலங்கை அணி 53.33 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இந்திய அணி நாளை மறுநாள் அகமதாபாத்தில் துவங்கும் போட்டியில் டிரா இல்லை வெற்றி பெற்றால், இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியது இல்லை. ஒருவேளை இந்திய அணி தோல்வியை சந்தித்தால், இலங்கை நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். இந்தியா ஆஸ்திரேலியா அணியிடம் தோற்று, நியூசிலாந்து அணியை இரண்டு போட்டிகளிலும் இலங்கை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை அணி இருக்கும் இந்திய அணி வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது!