பெண்கள் ஆசிய கோப்பை.. இந்தியா பாகிஸ்தான் போட்டி.. இலங்கை கிரிக்கெட் செய்த செயல்.. கூடிய எதிர்பார்ப்பு

0
44
Asia cup

கடந்த சில வருடங்களாக விளையாட்டுத்துறையில் கிரிக்கெட்டின் எழுச்சி சிறப்பாக இருந்து வருகிறது. இந்த வகையில் பெண்கள் கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களிடையே தற்பொழுது வரவேற்பு கிடைத்து வருகிறது. நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் பெண்கள் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் ஆரம்பித்து இலங்கை கிரிக்கெட் சிறப்பான ஒரு நகர்வை மேற்கொள்ள இருக்கிறது.

பெண்கள் ஆசிய கோப்பை தொடர் ஜூலை 19ஆம் தேதி இலங்கையில் துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் எட்டு ஆசிய அணிகள் பங்கு பெறுகின்றன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி வருகின்றன. அதில் இருந்து இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன் அணி தேர்வு செய்யப்படும்.

- Advertisement -

இதில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளம் ஆகிய நான்கு அணிகள் இருக்கின்றன. குரூப் பி-யில் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகள் இருக்கின்றன. தொடரை நடத்தும் இலங்கை அணி இந்திய அணிக்கு அடுத்து வலுவான அணியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்தத் தொடரை நடத்தும் இலங்கை கிரிக்கெட் ஜூலை 19ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் முதல் போட்டியில் இருந்து கட்டணமில்லாமல் அனைவரும் இலவசமாக போட்டியை பார்க்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் மூலம் போட்டிகளை இலவசமாகப் பார்க்கலாம்.

- Advertisement -

நடக்க இருக்கும் பெண்கள் ஆசிய கோப்பை தொடரின் பொறுப்பாளராக இலங்கை கிரிக்கெட்டின் துணைத் தலைவர் ரவின் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் இந்த முடிவு குறித்து அவர் பேசும் பொழுது “பெண்கள் ஆசிய கோப்பையை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பெண்கள் கிரிக்கெட்டில் ரசிகர்கள் அதிக அளவு பங்கு பெற்று ஆதரவை கொடுப்பதற்காக நாங்கள் இலவசமாக பார்க்கும்படி ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ரோகித் கேப்டன்சி மூளை வேற லெவல்.. இந்த 2 சம்பவங்கள் காலத்துக்கும் பேசப்படும் – இந்திய பவுலிங் கோச் பேட்டி

நடக்க இருக்கும் இந்த பெண்கள் ஆசிய கோப்பை தொடருக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய அணி களமிறங்கும். மேலும் துணை கேப்டனாக ஸ்மருதி மந்தனா இருப்பார். இந்திய அணியும் எதிர்காலத்திற்காக சில இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -