இலங்கை அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக இந்திய தொடருக்கு சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி மிக மோசமாக விளையாடி தோற்றது. குறிப்பாக மூன்றாவது போட்டியில் வெல்வதற்கு மிக அதிகபட்ச வாய்ப்பில் இருந்து தோற்றது. இது குறித்து சனத் ஜெயசூர்யா மிகவும் வருத்தமாக பேசியிருக்கிறார்.
இலங்கை அணி கடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்று உடன் வெளியேறி வந்த காரணத்தினால் பழைய தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்தின் சில்வர் வுட் ராஜினாமா செய்து வெளியேறினார். இந்த நிலையில் இடைக்கால பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளும் வலிமையான இடத்தில் இருந்து கடைசி ஐந்து ஓவர்களில் மிக மோசமாக சரிந்து இலங்கை அணி தோற்றது. இந்த தொடருக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல் திறன் இயக்குனர் ஜூபின் பருச்சாவை வைத்து ஒரு வார காலம் இலங்கை சிறப்பு பயிற்சி பெற்றது. சனத் ஜெயசூர்யா அணியை முடிந்த வரையில் தயார் செய்தார்.
இப்படியான நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களையும் இந்திய அணியின் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் ரிங்கு சிங் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் வீசினார்கள். இருந்த போதிலும் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்று அதில் இலங்கை முதல் பந்திலேயே பந்துவீச்சில் தோல்வியடைந்தது. மேலும் பேட்ஸ்மேன் இருக்க ஹசரங்கா பேட்டிங் செய்ய வந்ததும் விமர்சனமானது.
இதுகுறித்து பேசி இருக்கும் இலங்கை அணியின் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா “நிச்சயமாக மூன்றாவது டி20 போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கக் கூடாது. பயிற்சியாளராக உங்களால் சரியானவற்றை சொல்லத்தான் முடியும். ஆனால் களத்தில் இருப்பவர்கள் அழுத்தத்தை சமாளிக்க வேண்டியது அவசியம். இந்திய அணியின் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள் என்பது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.
1670 நாள்.. ஷிவம் துபே சேப்பாக் சோகம்.. கம்பீர் ரோகித் கூட்டணி முடிவுக்கு கொண்டு வருமா? இதையும் படிங்க :
இந்த போட்டியில் களத்தில் இருந்த குசால் பெரேரா குசால் மெண்டிஸ் ஆட்டம் இழந்ததும் ஒரு ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனை உள்ளே அனுப்பும்படி கேட்டார். அவருடைய எண்ணம் எங்களுக்கு புரிந்தது. ஆனால் தாங்கள் வழக்கமான பேட்டிங் வரிசையில் பேட்ஸ்மேனை அனுப்பவே நினைத்திருந்தோம். ஆனால் களத்தில் செட் ஆகி இருந்த பேட்ஸ்மேன் உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். எனவே அதன்படி செல்ல வேண்டியதாக இருந்தது. ஆனால் குசால் பெரேரா ஆட்டத்தை முடித்து தந்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என்று வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.