1670 நாள்.. ஷிவம் துபே சேப்பாக் சோகம்.. கம்பீர் ரோகித் கூட்டணி முடிவுக்கு கொண்டு வருமா?

0
432
Dube

இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த நிலையில் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தங்களுடன் எப்படி இணைந்து செயல்படுகிறார் என்பது குறித்து ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.

கவுதம் கம்பீர் கிரிக்கெட் களத்தில் மிகவும் வெளிப்படையானவராகவும், ஆக்ரோஷமானவராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். மேலும் தான் எப்பொழுதுமே வெற்றியை நோக்கி மட்டுமே செயல்படக்கூடிய நபர் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். போலியாக தன்னம்பிக்கை தரும் பேச்சுகளை தான் பேச விரும்புவதில்லை என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னுடைய இயல்புகளை எல்லாம் மொத்தமாக மாற்றிக் கொண்டு இந்திய அணியின் வீரர்களுக்கு தகுந்தபடி அவர்களுடன் இணைந்து செயல்பட்டார். இது வீரர்களை மிகவும் அவருடன் நெருக்கமாக வைத்தது.

எனவே கம்பீர் குணாதிசயத்திற்கு இந்திய வீரர்களுடன் எப்படி உடன்படுவார்? என்பது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் சந்தேகங்கள் இருந்து வந்தது. இந்த நிலையில் கம்பீர் டிரெஸ்ஸிங் ரூமில் எப்படி இருக்கிறார் என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரோஹித் சர்மா பேசும்பொழுது ” நாங்கள் இருவரும் கிரிக்கெட் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் எங்கெல்லாம் லேக் ஆனோம் எங்கெல்லாம் சிறப்பாக செயல்பட்டோம் என்பது குறித்து விவாதித்தோம். மேலும் அணியை எப்படி முன்னோக்கி கொண்டு செல்வது என்பது குறித்தும் கலந்து ஆலோசித்தோம். நாங்கள் இதற்கு முன் சந்தித்துக் கொள்ள நேரம் கிடைக்கவில்லை. தற்போது இலங்கையில்தான் சந்தித்துக் கொள்ள முடிந்ததால் நிறைய பேசினோம். மேலும் வரவிருக்கும் போட்டிகள் குறித்து விவாதித்தோம்.

இதையும் படிங்க: 14க்கு 7.. யாராலும் நெருங்க முடியாத பாண்டிங் சாதனை.. ரோகித் உடைக்க அருமையான வாய்ப்பு.. அடுத்தடுத்து நடக்குமா?

கம்பீர் பாய் டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் வேடிக்கையாக இருக்கிறார் நகைச்சுவையாகப் பேசுகிறார். அவர் சிரிப்பாரா சிரிக்க மாட்டாரா என்பதெல்லாம் அவருடைய தனிப்பட்ட விஷயம். நாம் இது இது குறித்து எல்லாம் பேசக்கூடாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்தவர்கள். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -