நேற்று ஆசியக் கோப்பையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பங்களாதேஷ் அணி இலங்கை அணியை வென்று தொடரை சுவாரசியமாக்கி இருக்கிறது. இந்த தோல்வி குறித்து இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பேசியிருக்கிறார்.
ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை அணி வென்றால் பங்களாதேஷ் வர முடியும் என்கின்ற நிலை இருந்தது. முக்கியமான அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை அணி வென்று பங்களாதேஷ் அணியை அடுத்த சுற்றுக்கு கூட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அதிரடி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு முன்னாள் கேப்டன் டசன் சனகா 37 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 64 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். குஷால் மெண்டிஸ் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. முஸ்தஃபிசூர் ரஹ்மான் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் சையப் ஹசன் 45 பந்துகளில் 61 ரன்கள், தவ்ஹீத் ஹ்ரிடாய் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுக்க, பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இழப்பை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இலங்கை தோல்வி காரணம்
இந்த தோல்வி குறித்து பேசி உள்ள சரித் அசலங்கா “இது அற்புதமான ஆட்டம். நாங்கள் கடைசி வரையில் எங்களுடைய பதட்டத்தை அடக்கி செயல் பட்டோம். ஆனால் அது போதுமானதாக இல்லை. எங்கள் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். சனகா சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் பெரிய சிக்ஸர்கள் அடித்தார். கிட்டத்தட்ட 170 ரன் எடுத்து நாங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம். எங்களுக்கு எதிர்பார்த்தது கிடைத்தும் தோற்று விட்டோம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : முகமது யூசுப்புக்கு அறிவில்ல.. நாங்க கிரிக்கெட்ல வல்லரசு.. இனிமே இது வேணாம் – அஸ்வின் பேச்சு
இலங்கை அணிக்கு இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் இருக்கிறது. இந்த இரண்டிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏதாவது ஒரு அணிக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் 90% இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.






