இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவை அசிங்கமான முறையில் பேசிய முகமது யூசுப் கருத்துக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையான முறையில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காத சம்பவத்தை பற்றி பேசிய முகமது யூசுப் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவை பன்றி என ஆங்கிலத்தில் பொருள் படும் விதமாக சுவார்குமார் என பேசி இருந்தார். இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
அறிவில்லாதவர்களுடன் வேண்டாம்
இதுகுறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” நான் ஒரு கிரிக்கெட் வீரர். எனக்கு தற்போது கிடைக்கும் மரியாதை மற்றும் அன்பு எல்லாமே நான் கிரிக்கெட் மைதானத்தில் என்ன செய்தேன் என்பதில் இருந்து கிடைக்கிறது. நாம் சில நேரம் எல்லைக்கோட்டை தாண்டியும் பேச வேண்டியது வரும். அதில் சிலர் மதிப்பான விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் நான் நமக்கு தெரியாத விஷயங்களில் நுழையாமல் இருப்பது நல்லது”
” இந்தியா கிரிக்கெட் வல்லரசுநான் சமீபத்தில் ஒரு அழகான கருத்தை படித்தேன். அதை என் வாழ்க்கையின் கடைசி வரையில் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். அது என்னவென்றால் உங்களின் அறிவு நிலைக்கு கீழே இருப்பவர்களுடன் விவாதிக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள முன்வர மாட்டார்கள். மாறாக அவர்கள் உங்களை அவர்களுடைய நிலைக்கு இழுத்துச் செல்வார்கள் என்பதுதான் அது”
இந்தியா கிரிக்கெட் வல்லரசு
“நீங்கள் அறிவு இருக்கும் காரணத்தால் தர்க்கம் செய்கிறீர்கள். அவர்களைப் புரிந்து கொள்ள வைக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அந்த இடத்தில் நீங்கள் அவர்களிடம் தோற்று விடுவீர்கள். எனவே நீங்கள் அறிவு நிலைக்கு கீழே இருப்பவர்களிடம் எப்பொழுதுமே பேசாதீர்கள்”
இதையும் படிங்க : இந்த 2 இந்திய வீரர்களை எதிர்கொள்ளவே பாகிஸ்தான் வீரர்கள் கூச்சப்படுவாங்க.. குரூப் 4 முதல் போட்டி குறித்து ஆகாஷ் சோப்ரா
“நாங்கள் வலுவான கிரிக்கெட் விளையாடுகிறோம். தரமான பேட்டிங் செய்கிறோம். நாங்கள் நன்றாக பந்து வீசுகிறோம். இதையே தொடர்ந்து நாங்கள் செய்வோம். கிரிக்கெட் விளையாடும் நாடாக இந்தியா வல்லரசு நாடு. இந்த வழியில் இருந்து நாங்கள் இதை தொடர்ந்து கட்டி எழுப்புவோம்” என்று கூறியிருக்கிறார்.






