இவரை விமர்சனம் பண்ணி பாருங்க.. ரசிகர்கள் எத்தனை நாள் ஆனாலும் விடமாட்டாங்க – பாட் கம்மின்ஸ் பேட்டி

0
361
Cummins

கிரிக்கெட் உலகத்தில் தற்போது கேப்டன்களில் மிகவும் வெற்றிகரமானவராக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட இந்திய வீரருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணி நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் பொழுது கேப்டன் பொறுப்பிற்கு வந்து, அந்த அணியின் ஆக்ரோச அணுகுமுறையை மாற்றி, புது ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் பாணியை உருவாக்கிய கேப்டனாக வரலாற்றில் பதிவாகிறார்.

- Advertisement -

மேலும் அதே சமயத்தில் ஆசஸ் டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் என பெரிய வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு கேப்டனாக மிகப்பெரிய சேவை செய்திருக்கிறார்.

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வாங்கப்பட்டதோடு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு அணியை இறுதிப்போட்டிக்கும் நகர்த்திச் சென்றார்.

இந்த நிலையில் விராட் கோலி பற்றி பேசி இருக்கும் பாட் கம்மின்ஸ் கூறும் பொழுது ” நீங்கள் விராட் கோலியை பற்றி ஏதாவது கூறினால் அடுத்த சில வருடங்களில் கவனியுங்கள், நீங்கள் சமூக வலைதளங்களில் இருந்தால் வேட்டையாடப்படுவீர்கள். ஒருமுறை அவரைப் பற்றி நான் பாராட்டி பேசியிருந்தேன். அதாவது அவர் ஒரு கன் வீரர். ஆனால் அவர் சதம் அடிக்கும் மாட்டார் என்று கூறி இருந்தேன். ஒரு ஆறு மாதம் கழித்து அவர் சதம் அடித்திருந்தார். அப்போது நான் முன்பு சொன்ன கருத்துக்காக சமூக வலைதளத்தில் அவர்களது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டேன். அவர்கள் விட மாட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இதுவரை இல்லாத பரிசுத்தொகை.. ஐசிசி அறிவிப்பு.. 2024 டி20 உலக கோப்பை புது ரெக்கார்ட்

மேலும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாட் கம்மின்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக மிட்சல் மார்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். டீம் காம்பினேஷனுக்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தைரியமாக சுயநலமில்லாமல் இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.