101 ரன் 10 விக்கெட்.. 27 வருடங்கள் கட்டிக்காத்த பெருமை முடிந்தது.. இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி தொடரை வென்றது

0
367
Srilanka

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்தப் போட்டிக்கான டாசில் இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா வெற்றி பெற்று தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது முறையாக டாஸ் வெல்லும் வாய்ப்பை இழந்தார். டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இந்திய அணிக்கு இந்த தொடர் முழுக்க இது பெரிய பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி துவக்க ஆட்டக்காரர்கள் பதுவும் நிஷாங்கா 65 பந்தில் 45, அவிஷ்கா பெர்னாடோ 102 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். தொடர்ந்து குசால் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி 82 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.

இலங்கையணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் ரியான் பராக் ஒன்பது ஓவர்கள் பந்து வீசி 54 ரன்கள் விட்டுத் தந்து மூன்று விக்கெட் தன்னுடைய முதல் போட்டியில் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் பத்து ஓவர்களுக்கு 36 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் துணை கேப்டன் சுப்மன் கில் 14 பந்துகளில் 6 ரன்கள், கேப்டன் ரோகித் சர்மா 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து விராட் கோலி 18 பந்தில் 20 ரன்கள், ஸ்ரேயாஸ் அய்யர் 7 பந்தில் 8 ரன்கள், ரிஷப் பண்ட் 9 பந்தில் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

மேலும் உள்ளே வந்த அறிமுக வீரர் ரியான் பராக் 13 பந்தில் 15 ரன்கள், சிவம் துபே 14 பந்தில் 9 ரன்கள், அக்சர் படேல் 7 பந்தில் 2 ரன்கள், 25 பந்தில் 30 ரன்கள், குல்தீப் யாதவ் 30 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இந்திய பணி 26.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 37 விக்கெட் இழப்பில்லாமல் இருந்த இந்திய அணி அடுத்த 101 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 16 வருடம்.. விராட் கோலி மோசமான சாதனை.. இந்திய ரசிகர்களை கோபப்படுத்திய ஆட்டம்

மேலும் இலங்கை அணி 2-0 எனத் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இத்தோடு 27 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அணிக்கு இது மிகவும் நம்பிக்கை அளிக்க கூடிய வெற்றியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -