47 ஓவர்.. நிசாங்கா அசலங்கா நங்கூர ஆட்டம்.. பங்களாதேஷ் அணிக்கு திருப்பி கொடுத்த இலங்கை

0
226
Srilanka

இலங்கை அணி தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது.

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு லிட்டன் தாஸ் இந்த முறையும் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார் 66 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். கேப்டன் நஜீபுல் சாந்தோ 40, தவ்ஹீத் ஹ்ரிடாய் 96* ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு பங்களாதேஷ் 287 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு 43 ரன்கள் எடுப்பதற்குள் அவிஷ்கா பெர்னாடோ 0, கேப்டன் குஷால் மெண்டிஸ் 16, சதிர சமரவிக்ரமா 1 என வரிசையாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள். இந்த போட்டியை தோற்றால் தொடரையும் இழக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரட்டை சதம் அடித்திருந்த பதும் நிசாங்கா மற்றும் அனுபவ வீரர் சரித் அசலங்கா இருவரும் ஜோடி சேர்ந்து, கொஞ்சம் பொறுமையாகவும் அதே நேரத்தில், தேவைக்கு ஏற்றபடி ரன்கள் எடுத்தும், கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை அணியை மீட்க ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் கடந்தார்கள். நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்து பதும் நிஷாங்கா சதம் அடித்து 113 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 114 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை எளிதாக்கி 185 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய சரித் அசலங்கா 93 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 91 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : நல்லவேளை பாபர் அசாம் அவுட்.. அது அவரோட டீமுக்கே நல்லதுதான் – மைக்கேல் கிளார்க் விமர்சனம்

இவர்களுக்கு அடுத்து வந்த வனிந்து ஹசரங்கா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 26 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். 47.1 ஓவரில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் தரப்பில் சோரிஃபுல் இஸ்லாம் மற்றும் டஸ்கின் அகமத் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்திருக்கிறது. மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அணிகள் தடுமாறும் பொழுது இலங்கை அணி சிறப்பாக விளையாடியிருக்கிறது.