பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு 18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த இலங்கை அணி பெரிய ஆச்சரியத்தை கொண்டு செய்திருக்கிறது.
நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடராக நாளை இலங்கை காலே மைதானத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்களின் அட்டவணை
பங்களாதேஷ் அணியின் இந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 17 மற்றும் ஜூன் 25 தேதிகளில் இலங்கையின் காலே மற்றும் கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 2, 5, 8 தேதிகளிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 10, 13, 16 தேதிகளிலும் நடைபெற இருக்கிறது. இதில் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் துவக்கம் காரணமாகவும், 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இலங்கையில் நடைபெற இருப்பதாலும், டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் இருள் அனைத்துமே முக்கியமாக அமைகிறது.
6 அன்-கேப்டு வீரர்கள்
தற்போது இலங்கை டெஸ்ட் அணியில் திமுத் கருணரத்தனே ஓய்வு பெற்று விட்டார். ஏஞ்சலோ மேத்யூஸ் பங்களாதேஷ் தொடருடன் ஓய்வு பெறுவதற்கு இருக்கிறார். மேலும் அடுத்தடுத்து சில மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே இதை மனதில் வைத்து இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு 18 பேர் கொண்ட இலங்கை அணியில் ஆறு அன்-கேப்டு வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க : காம்போஜ் சர்பராஸ் வேணாம்.. அந்த பையன் தான் வேணும்.. திரும்ப வேலையை காட்டிய கம்பீர்.. என்ன நடந்தது?
இலங்கை அணி : தனஞ்சய டி சில்வா (கே), பதும் நிஸ்ஸங்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்தியூஸ், கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அகில தனஞ்சய, மிலன் ரத்நாயக்க, அசித பெர்னாண்டோ, கசுன் ரஜித, குசால் மெண்டிஸ், பசிந்து சூரியபண்டாரா, சோனல் தினுஷா, பவன் ரத்நாயக்க மற்றும் இசித விஜேசுந்தர.






