ஷிகர் தவானுக்கு இதான் ப்ளான்.. இந்த பஞ்சாப் பையன் விளையாடுறது இந்தியாவுக்கும் நல்லது – புவனேஸ்வர் குமார் பேட்டி

0
767
Bhuvi

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சின் பவர் பிளேவில் புவனேஸ்வர் குமார் அபாரமான முறையில் பந்துவீசினார். பந்துவீச்சில் அவர் ஆரம்பத்தில் உண்டாக்கிய தாக்கம், பஞ்சாப் அணியின் ரன் ரேட்டை தடுத்து, ஹைதராபாத் அணி கடைசியில் வெற்றி பெற பெரிதும் உதவியது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு 37 பந்தில் 64 ரன்கள் நிதிஷ்குமார் ரெட்டி எடுத்தார். இதன் காரணமாக அந்த அணி சவால் அளிக்கும் ஸ்கோராக 182 ரன்கள் 9 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஸ்தீப் சிங் நான்கு விக்கெட் வீழ்த்தினார். கடைசி கட்டத்தில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் நிறைய ரன்கள் கொடுத்து விட்டார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடும் பொழுது, பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் விக்கெட்டை வீழ்த்தினார். இதில் ஷிகர் தவான் விக்கெட்டை ஸ்டெம்பிங் மூலம் வீழ்த்தியதுதான் மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்தது. கீப்பரை முன்னே வரவைத்து, அவர் கிரீசை விட்டு வெளியில் வந்து விளையாடும் பொழுது, புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீச கிளாசன் அருமையாக ஸ்டெம்பிங் செய்தார்.

இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு ரன்கள் அடைந்தது. இவ்வளவு தூரம் போட்டி நெருக்கமாக செல்வதற்கு அந்த அணியின் இளம் வீரர் அசுடோஸ் சர்மா முக்கிய காரணமாக இருந்தார். அவர் கடைசி கட்டத்தில் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அவரால் அதை அடைய முடியவில்லை. ஆனால் இன்று தனி வீரராக ஹைதராபாத் அணிக்கு பயத்தை காட்டிவிட்டார்.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹைதராபாத் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் கூறும் பொழுது “டி20 கிரிக்கெட்டின் அழகை இதுதான். இது பந்துவீச்சாளர்களுக்கான விளையாட்டு கிடையாது. நாங்களும் ரன்கள் எடுத்தோம், அவர்களும் ரன் கள் எடுத்தார்கள். ஆனால் நாங்கள் வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியளிக்கிறது. ஷிகர் தவான் கிரீசை விட்டு மேலே வந்து விளையாடிக் கொண்டிருந்தார். எனவே நான் கீப்பரை கீழே வந்து நிற்க சொன்னேன்.அது எங்களுக்கு பலன் அளித்தது.

இதையும் படிங்க : 37 பந்தில் 64 ரன்.. மனசுக்குள்ள சொல்லிக்கிட்டது இதுதான்.. பேட்டிங் பவுலிங் பிளான் இத வச்சு பண்ணினேன் – நிதிஷ் குமார் ரெட்டி பேட்டி

மேலும் நாம் தொடர்ச்சியாக ஒரே விஷயத்தைதான் செய்யப் போகிறோம். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் பொழுது நமக்கு அதிர்ஷ்டமும் தேவை. இன்று அசுடோஸ் சர்மா பஞ்சாப் தரப்பில் மிகவும் அருமையாக விளையாடினார். யாராவது பேட்டிங் செய்யும்பொழுது, அவர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்கின்ற நம்பிக்கை உங்களுக்கு உருவாகிறது என்றால் அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று அர்த்தம். இந்த இளம் வீரர் சிறப்பாக விளையாடியது பஞ்சாப் மட்டுமல்ல இந்தியாவுக்கும் நல்லது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -