பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் வெளியேற்றம் ; கடைசி இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணி & வழிகள் என்ன ?

0
239
Virat Kohli and Rishabh Pant

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில், நேற்று 66வது போட்டியாக, மும்பையின் வான்கடே மைதானத்தில் பெங்களூர் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி, ப்ளே-ஆப்ஸ் சுற்றின் அணிகளை 75% முடிவு செய்திருக்கும் போட்டியாக அமைந்தது என்று சொல்லலாம்.

டாஸில் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, குஜராத் அணி ஏற்கனவே ப்ளேஆப்ஸ் வாய்ப்பை முதல் அணியாக, முதலிடத்தில் உறுதி செய்திருப்பதால், அடுத்து வரும் முக்கிய ஆட்டங்களுக்கான பரிசோதனையாக பேட்டிங்கை தேர்வு செய்து, தானே அரை சதமடித்து அணியை 168 ரன்கள் எட்ட வைத்தார். இறுதிக்கட்டத்தில் ஆறு பந்துகளில் 19 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

பின்பு 169 ரன் என்ற இலக்கோடு களமிறங்கிய பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் பாஃப்-விராட் ஜோடி 115 ரன்களை முதல் விக்கெட்டுக்கு குவித்து அசத்தியது. இந்தத் தொடரில் பேட்டிங் பார்மை இழந்திருந்த விராட்கோலி இந்த ஆட்டத்தில் அற்புதமாக ஆடி 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்மெல் 11 பந்துகளில் 22 ரன்களை குவிக்க, பெங்களூர் எளிதாய் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியின் இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்கு நூலிழையில் இருந்த ப்ளேஆப்ஸ் வாய்ப்பும் பறிபோனது. கொல்கத்தா அணியுடனான போட்டியில் திரில் வெற்றி பெற்றிருந்த லக்னோ அணி, ராஜஸ்தான் அணியோடு பிளே-ஆப்ஸ் சுற்றுக்கான தங்களின் இடத்தை உறுதி செய்திருந்தது.

தற்போது முதலிடத்தில் குஜராத் அணியும், இரண்டாம் இடத்தில் லக்னோ அணியும், மூன்றாம் இடத்தில் ராஜஸ்தான் அணியும் இருக்கிறது. இன்று சென்னையுடன் மோதும் ஆட்டத்திலை ராஜஸ்தான் அணி வென்றால், ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறும். லக்னோ அணி மூன்றாம் இடத்திற்கு கீழ் இறங்கும். ப்ளேஆப்ஸ் சுற்றின் நான்காவது அணிக்கான இடத்திற்கு தற்போது பெங்களூர் அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. மும்பையும் டெல்லி அணியும் மோதும் கடைசிப் போட்டியில் டெல்லி அணி வென்றால், ப்ளேஆப்ஸ் சுற்றுக்கு ரன்ரேட் அடிப்படையில் நான்காவது அணியாய் நுழையும். தோற்றால் பெங்களூர் அணி நுழையும். தற்போது பெங்களூர், டெல்லி அணிகளின் ப்ளேஆப்ஸ் வாய்ப்பு, மும்பை அணியுடன் டெல்லி மோதும் ஆட்டத்தில்தான் இருக்கிறது!

- Advertisement -