தற்போது ஹர்பஜன் சிங் செய்திருக்கும் ஒரு காரியத்திற்கு அவரால் தன்னை எப்பொழுதும் மன்னிக்க முடியாது என ஸ்ரீசாந்த் மிகவும் கோபமான முறையில் பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஆரம்ப காலகட்டத்தில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் மைதானத்தில் அறைந்தது பெரிய பரபரப்பான சம்பவமாக இருந்தது. இந்த நிலையில் அதை மறந்து இருவருமே பழகினார்கள். தற்போது ஸ்ரீசாந்த் மீண்டும் ஹர்பஜன் சிங் பிரச்சனையை உருவாக்கி இருப்பதாக கூறி இருக்கிறார்.
ஹர்பஜன் சிங் நடு மைதானத்தில் ஸ்ரீசாந்தை அறைந்தது தனக்கு எப்பொழுதும் மிகவும் வருத்தத்தை கொடுக்கும் ஒரு சம்பவமாக இருப்பதாகவும், தான் ஒரு தவறான முன்னுதாரணமாக தன்னுடைய குழந்தையின் முன்னால் நின்று விடக்கூடாது எனவும் உருக்கமான முறையில் மன்னிப்பு கேட்டிருந்தார்.
மேலும் ஸ்ரீஷாந்த் இந்த விவகாரத்தை சுமுகமாக எப்பொழுதோ முடித்துக் கொண்டார். இதை அவர் பெரியதாக மாற்றவில்லை. எனவே இருவரும் மீண்டும் நண்பர்களாகவே தொடர்ந்து வந்தார்கள். இந்த நிலையில் தான் மீண்டும் இதில் சிக்கல் எழுந்துள்ளது.
தற்போது ஸ்ரீசாந்தை அறைந்த விவகாரத்தை வைத்து ஒரு விளம்பரத்தில் ஹர்பஜன் சிங் நடித்திருக்கிறார். அதற்கு அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளமும் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதான் பிரச்சினையை உண்டாக்கி உள்ளது.
இதையும் படிங்க : விராட் கோலி செஞ்சது இல்லீகல்.. நியாயமா குஜராத் டீம் அதுக்கு புகார் கொடுக்கணும்.. என்ன மனுஷன் – அஸ்வின் பேச்சு
இதுகுறித்து ஸ்ரீசாந்த் பேசும்போது “ஹர்பஜன் சிங் இந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்த ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமும் வாங்கி இருக்கிறார். இத்தோடு இந்த விளம்பரத்தை பிரபலப்படுத்த என்னையும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைக்க சொன்னார். நான் அப்பொழுதே மன்னிப்பேன் ஆனால் மறக்க மாட்டேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டேன். மேலும் இன்ஸ்டாகிராமில் அவரை நான் தற்போது பிளாக் செய்து விட்டேன். அவர் மோசமாக நடக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.