நேற்று குஜராத் அணிக்கு எதிராக விராட் கோலி பேட்டிங் செய்த விதம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் வியந்து பாராட்டி பேசியிருக்கிறார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடித்து 44 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்தார். நேற்று அவருடைய ஸ்டிரைக் ரேட் 184 என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரஞ்சு தொப்பி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா ஏழு போட்டிகளில் 323 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்து ஏழு போட்டிகளில் மூன்று அரை சதங்கள் உடன் 328 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
விராட் கோலி தொடர்ந்து பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வருகிறார். இப்போது அபிஷேக் சர்மா, சூரியவன்சி, பிரியன்ஸ் ஆர்யா போன்ற இளம் அதிரடி வீரர்கள் வந்த பிறகும் கூட, விராட் கோலியும் அதற்கேற்ற வகையில் தனது பேட்டிங்கை அதிரடியாக மாற்றி ஆரஞ்சு தொப்பிக்கு போட்டியிட்டு வருகிறார்.
விராட் செய்வது இல்லீகல்
இது குறித்து அஸ்வின் பேசும்போது “விராட் கோலி பேட்டிங் செய்யும் விதம் இல்லீகல். சின்ன பையன் மாதிரி ஆடுறாரு. குஜராத் சின்னசாமி மைதானத்திற்கு பக்கத்துல இருக்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம். எல்லா வருஷமும் இப்படியே ஆடிட்டு இருந்தா என்ன செய்யறது?”
இதையும் படிங்க : சாய் சுதர்சன் செஞ்சது எனக்கு வருத்தமா தான் இருந்தது.. அடுத்த முறை பவர் பிளேவில் ஆட எனக்கு வாய்ப்பு தருவார் என்று நினைக்கிறேன் – கில் பேட்டி
” நேத்து விராட் கோலிக்கு ஆரம்பத்துல பேட்ல பந்து நல்லா படவே இல்ல. இந்த நேரத்துல பிரசித் கிருஷ்ணா மார்புக்கு போட்ட ஒரு பந்த மடக்கி அடிக்காம கவர்ல தூக்கி அடிக்கிறார். அடுத்து ஜேசன் ஹோல்டர் சிறப்பா பந்தை உள்ளுக்குள்ள போட்டார். இதனால் லெக் ஸ்டெம்பை விட்டு தள்ளி வந்து சிக்ஸர் அடிக்கிறார். இப்படி பேட்ல பந்து நல்லா படாத நிலைமையில் கூட, மூளையை வைத்து இப்படி எல்லாம் ஆடினா மத்தவங்க என்ன செய்ய முடியும்?” என்று கூறி இருக்கிறார்.






