ரோகித் சர்மாவே சொல்லிட்டார்.. 2011ல அந்த வீரர் செஞ்சத ஹர்திக் பாண்டியா செய்ய போறார் – ஸ்ரீசாந்த் பேச்சு

0
184
Hardik

நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வி அடையாமல் இந்திய அணி அரையிறுதி சுற்றை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய வீரராக இருப்பார் என ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வரும் டீ 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இதுவரை தோல்வி அடையாமல் அரையிறுதி சுற்றை எட்டி இருக்கின்றன. மேலும் இரண்டு அணிகளாக ஒரு போட்டியில் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் வந்திருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணி நாளை மறுநாள் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. அதே நாளில் இரண்டாவது இன்னொரு அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

நேற்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இருநூறு ரன்கள் குவித்து வெற்றி பெற்றது இந்திய அணியின் நம்பிக்கையை பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. மேலும் இந்திய அணி மூன்று துறைகளிலும் சிறப்பான நிலையில் காணப்படுகிறது. நல்ல காம்பினேஷன் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறும் பொழுது “ரோகித் சர்மா முந்தைய போட்டியின் முடிவுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் முக்கிய வீரர் என்று கூறினார். யுவராஜ் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு செய்ததை இவராலும் செய்ய முடியும். ரோஹித் சர்மாவின் அணி கோப்பையை வென்றால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆப்கான் எங்களை ஏமாத்தி வெளியே அனுப்பிடுச்சு.. இதெல்லாம் பழசு – ஆஸி ஆடம் ஜாம்பா எதிர்ப்பு

2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் இழந்த இந்திய அணிக்கு, இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலக கோப்பை தொடரை வெல்வது மிகச் சிறந்த மருந்தாக அமையும். மேலும் அரையிறுதியை கடந்து விட்டால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்” என்பது குறிப்பிடத்தக்கது.