நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 17 ஆவதுஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வென்று கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. இந்த ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி விருதை விராட் கோலி கைப்பற்றியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விராட் கோலிக்கு சர்ச்சைகளுடன் ஆரம்பித்தது. அவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறித்து ஐபிஎல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் திடீரென விவாதங்கள் உருவாக ஆரம்பித்தது. இந்த விவாதங்கள் பெரும்பாலும் உலகக்கோப்பையில் சேர்க்க இந்தியத் தேர்வுக் குழு விரும்பவில்லை என்பது போலாகப் பரப்பப்பட்டது.
இதற்கு அடுத்து ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க ஆர்சிபி அணி எட்டு போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வி அடைய, ஒரு பக்கம் விராட் கோலி மட்டுமே நின்று விளையாடி தனியாக பேட்டிங்கில் போராடிக் கொண்டிருந்தார். ஆனாலும் கூட அவர் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக விளையாடுகிறார் எனவே அந்த அணி தோர்கிறது என்று மீண்டும் விமர்சனங்கள் உருவானது.
இப்படியான நிலையில் ஆர்சிபி அணி கடைசி ஆர் போட்டிகளை வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, மற்ற வீரர்களும் நல்ல முறையில் விளையாட விராட் கோலி மீதான விமர்சனங்கள் நின்றது. மேலும் அவரை டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலும் தேர்வு செய்தார்கள்.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி ஒட்டுமொத்தமாக 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 5 அரைச்சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். இவருடைய ரன் ஆவரேஜ் 61.75 என இருக்க, ஸ்ட்ரைக் ரேட் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து 154.69 என்று அதிகரித்திருக்கிறது.
இதையும் படிங்க : வெறும் 13 ஓவர்.. தென் ஆப்பிரிக்க அணிக்கு சம்பவம்.. வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ் செய்தது
இந்த நிலையில் ஆரஞ்சு தொப்பி விருதை வென்ற விராட் கோலி பேசும் பொழுது ” இந்த சீசனுக்கான இந்த ஆரஞ்சு தொப்பி விருதை பெறுவது மிகவும் பெருமையாகஇருக்கிறது. இந்தப் பயணம் ஒரு ரோலர் போஸ்டர் போல மேலும் கீழுமாக அமைந்தது. இந்த சீசன் முழுவதிலும் நான் அணிக்காக செய்த எல்லா விஷயங்களுக்கும் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக நாங்கள் சீசனில் ஒவ்வொரு போட்டியையும் நன்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய பொழுது சிறப்பாக செயல்பட்டோம். 2025 ஐபிஎல் சீசனிலும் இதை பிரதிபலிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.