தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ 20 தொடர் ஜனவரி 9ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்கி பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பார்டர் கவாஸ்கர் தொடர் முடிவடைந்த பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வெறுமையாக தற்போது உணர்கிறார்கள்.
அடுத்ததாக இந்திய அணி வரும் 22ஆம் தேதி தான் விளையாடுகிறது. அதுவரைக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் ரசிகர்களுக்கு ஐபிஎல் பாணியில் ஒரு மினி ஐபிஎல் தொடர் நடக்கிறது. எஸ்ஏ டி20 தொடரில் ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்க நகரங்களை மையமாக வைத்து ஆறு அணிகளை வாங்கி இருக்கிறார்கள்.
ஐபிஎல் அணிகள் வாங்கிய 6 அணிகள்
இதில் சிஎஸ்கே வின் ஜோகானஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின் எம் ஐ கேப் டவுன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பார்ல் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டெல்லி கேப்பிட்டல் அணியில் பிரிடோரியல் கேப்பிட்டல் ஆகிய அணிகளை வாங்கி இருக்கிறது.
இந்தப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றாலும் இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இரவு 9 மணி அளவில் நடத்தப்படுகிறது என்றால் மாலை 4:30 மணிக்கு முதல் போட்டி நடத்தப்படுகிறது. தென்னாபிரிக்க ஆடுகளங்கள் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் டின்னர் ஆக இருக்கும். இந்த தொடரில் காவியா மாறனின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர் கேப் அணி தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கி இருக்கிறது.
எந்த அணி பலமாக இருக்கிறது
மூன்றாவது முறையாக ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தை வாங்கும் முனைப்புடன் எய்டன் மார்க்கரம் தலைமையிலான அணி இருக்கிறது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஒரு மினி சிஎஸ்கே அணி போல் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் ஏற்கனவே விளையாடிய வீரர்கள் தற்போதைய வீரர்கள் அனைவரும் இணைந்து இருப்பது நம்மவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: WTC பைனல்.. எங்கள பார்த்தா.. இந்த வாய்ப்பை தர மாட்டாங்க.. ஆனா இது எங்களால முடியும் – கேசவ் மகாராஜ்
இருப்பதிலேயே பலமான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திரள்கிறது. ரஷித் கான் தலைமையில் இருக்கும் அணியில் ரபாடா, ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரண், டிவால்ட் பிரேவிஸ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனலில் பார்க்கலாம். ஆன்லைனில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கண்டு களிக்கலாம்.