ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணி வீரரான தப்ரைஸ் சம்ஷி சூரியகுமார் யாதவ் இறுதிப்போட்டியில் பிடித்த கேட்ச் குறித்து தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
டி20 உலக கோப்பை முடிந்து சரியாக மூன்று மாதங்கள் ஆகிறது. இருப்பினும் தற்போது வரை அந்த போட்டிக்கு குறித்து ஏதேனும் தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இறுதிப் போட்டியில் விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்சார் பட்டேல் என முன்னணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் சிக்ஸருக்கு தூக்கி அடிக்கப்பட்ட பந்தை சூரியகுமார் யாதவ் மிக அற்புதமாக தாவி பிடித்து அதை கேட்ச் செய்தார்.
டி20 உலக கோப்பையில் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் சூரியகுமார் யாதவ் பிடித்தது கேட்ச் மட்டும் அல்ல உலக கோப்பையை பிடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை வைரல் ஆக்கினர். இருப்பினும் ஒரு தரப்பினர் அந்த கேட்ச் பிடிக்கப்பட்ட போது எல்லை கயிறு சற்று நகர்த்தி வைக்கப்பட்டு இருந்ததாக கூறிவந்தனர். இருப்பினும் அதற்கான தெளிவான விளக்கமும் கொடுக்கப்பட்டு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணி வீரரான ஷம்சி ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் இளைஞர்கள் குழு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க, அதில் பவுலர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் ஒருவர் சிக்சருக்கு தூக்கி அடிக்க, அதை எதிர் அணியின் பீல்டர் அற்புதமாக கேட்ச் செய்திருப்பார். இருப்பினும் எல்லைக்கோட்டின் அருகே அது பிடிக்கப்பட்டு இருப்பதால் கயிறை வைத்து சரி பார்த்த பின்னர் அது சிக்ஸர் என்று அறிவிக்கப்படும்.
அந்த வீடியோவை நகைச்சுவையாக பதிவிட்டு “டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் கேட்ச்சை சரி பார்க்க இந்த முறையை பயன்படுத்தி இருந்தால் அந்த கேட்ச் நாட் அவுட் கொடுக்கப்பட்டிருக்கலாம். இது நகைச்சுவைக்காக மட்டுமே சொல்லப்பட்டது. சிலருக்கு புரியவில்லை என்றால், இதற்காக யாரும் அழவில்லை என்றால் உங்களுக்கு நான் ஒரு நான்கு வயது குழந்தையைப் போல விளக்க முயற்சிக்கிறேன் இது ஒரு ஜோக். என்று சிரிக்கின்ற ஸ்மைலி உடன் பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க:510 ரன்.. சூரிய குமாரின் மும்பைக்கு தமிழக அணி மெகா டார்கெட்.. கேப்டன் சாய் கிஷோர் அசத்தல்.. புச்சி பாபு 2024
அதாவது இதை நகைச்சுவைக்காக மட்டுமே சொல்லப்பட்டது என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
‘do men even take things seriously?’
— sambar vadai (@jupiter_vaazhga) August 28, 2024
the men in question: pic.twitter.com/VqCpGknmr3