இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பிறகு அணித் தேர்வில் நிறைய வித்தியாசமான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.
புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் வீரர்களை கையாள்வதில் வித்தியாசமான வழிமுறையை கொண்டு இருக்கிறார். எல்லா வீரர்களும் எல்லா வடிவத்திற்கும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் மிக முக்கியமாக வீரர்கள் நல்ல உடல் தகுதியுடன் நல்ல பார்மில் இருந்தால் ஓய்வு எடுக்கக் கூடாது எனக் கூறி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த டி20 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமை பேச்சாளராக இருந்த பொழுது, அந்த உலகக் கோப்பை இந்திய அணியின் ரிசர்வ் வீரராக ஆவேஷ் கான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதே சமயத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.
முக்கிய வீரர்கள் விளையாடாத இந்த தொடரில் டி20 உலகக்கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக இருந்த அவர்தான் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் தற்போது அவரை திடீரென இந்தியத் தேர்வுக்குழு கழட்டிவிட்டு இருக்கிறது. புரிந்து கொள்ள முடியாத இந்த விஷயம் குறித்துதான் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ரிசர்வ் வீரராக வேகப் பந்துவீச்சாளர் இருந்தார். ஆனால் அதன் பிறகு இந்திய அணி விளையாடிய டி20 தொடரில் அவர் இல்லை. ஒரு நல்ல கேள்வி, அவர் தற்பொழுது எங்கே போனார்? நீங்கள் அவர் மீது முதலீடு செய்ய நினைத்திருந்தால், அடுத்தடுத்த தொடர்களில் நீங்கள் அவருக்குத்தான் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு அடுத்து அவருக்கு விளையாட வாய்ப்புகள் தரப்படவில்லை.
வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை நான் தனிப்பட்ட முறையில் மிகவும் உயர்வாக மதிப்பிடுகிறேன். டி20 கிரிக்கெட்டில் அவருடைய புள்ளிவிபரம் நன்றாக இல்லை. அவர் விளையாடிய போதெல்லாம் நிறைய ரன்களுக்கு அடிக்கப்பட்டு இருக்கிறார். ஆனாலும் அவர் மீது நான் முதலீடு செய்ய விரும்புகிறேன்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பங்களாதேஷ் டெஸ்ட்.. அதிகபட்ச டிக்கெட் விலை 83 ரூபாய்.. குறைந்தபட்சம் எவ்வளவு தெரியுமா. காரணம் என்ன?
பிரசித் கிருஷ்ணா உயர் மட்ட கிரிக்கெட்டில் சிறந்த திறன்களை கொண்டிருக்கும் வீரராக இருக்கிறார். எனவே அவர் மீது இப்போது இருந்து முதலீடு செய்ய தொடங்க வேண்டும். அதே சமயத்தில் ஆவேஷ் கானுக்கும் ஒரு தெளிவான பாதையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்” எனக் கூறி இருக்கிறார்.