தென் ஆப்பிரிக்கா அணியின் 32 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த முறை டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. மேலும் அவர்களுக்கு இதுதான் ஒரு உலகக் கோப்பை இறுதிப்போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி இடம் தோல்வி அடைந்தது அவர்களது மனதை உடைத்து இருக்கிறது. மேலும் சூரியகுமார் கேட்ச் விவகாரம் பற்றியும் அந்த அணியின் கேசவ் மகாராஜா தற்பொழுது மவுனம் கலைத்து பேசியிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை டேவிட் மில்லர் தூக்கி அடிக்க, எல்லைக்கோட்டில் நின்ற சூரியகுமார் யாதவ் மிக சாமர்த்தியமாக பந்தை பிடித்து காற்றில் வீசி, எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்று மீண்டும் எல்லைக்கோட்டிற்கு உள்ளே வந்து காற்றில் இருந்த பந்தை பிடித்து, இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான தருணத்தை உண்டாக்கினார்.
அதே சமயத்தில் ஆரம்பத்தில் இந்த கேட்ச் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியில் இருந்தது. வெளியில் இருந்த பலர் நடுவரின் முடிவு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள். இந்த நிலையில் ஐசிசி எல்லோருடைய சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தெளிவான வீடியோவை வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
தற்போது இதுகுறித்து தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மஹாராஜ் பேசும்பொழுது “உண்மையைச் சொல்வது என்றால் நாங்கள் உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததில் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம். வானிலை காரணமாக நாங்கள் தாமதமாக வந்து சேர்ந்தோம். இது நாங்கள் அடிப்படையில் இருப்பதில் பிரச்சனையை உண்டாக்கியது. மேலும் போட்டியில் கேட்ச் விவகாரம் என எதையும் எங்களால் மாற்ற முடியாது. நாங்கள் எங்களுடைய வேலையில் கவனம் செலுத்துகிறோம்.
எந்த முடிவு எடுக்கப்படாவிட்டாலும், இல்லை முடிவு எடுக்கப்பட்டாலும் அதை எங்களால் எப்பொழுதுமே மாற்ற முடிய போவது கிடையாது.எனவே நாம் தொடர்ச்சியாக நெகட்டிவ்வான விஷயங்களில் நிற்கக்கூடாது.சில விஷயங்களை தீர்த்துக் கொள்வதற்கு நமக்கு சரியான நேரங்கள் கிடைக்கும். நான் மற்றதை எல்லாம் விட்டு வெளியில் வந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : சச்சின் தோனி.. யாரும் இங்க இந்த விஷயத்தில் ஸ்பெசல் கிடையாது – ரெய்னாவுக்கு உத்தப்பா எதிர் கருத்து
ஒரு உலகக் கோப்பை தொடரில் நீங்கள் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் பொழுது அங்கு மிகப்பெரிய அளவில் அழுத்தம் இருக்கும். முதலில் இந்தத் தோல்வியை ஜீரணிப்பதற்கு கடினமாக இருந்தது.அதே சமயத்தில் நான் எதிர்காலம் குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன். உலகக் கோப்பை தொடரில் எங்களுக்கு நிறைய பாசிட்டிவ்வான விஷயங்கள் இருந்தது. குறுகிய காலத்தில் அணியின் வளர்ச்சியை பார்க்கும்பொழுது அது நம்பிக்கையை உண்டாக்குகிறது மேலும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறது. எனவே வலி மற்றும் காயங்களுக்கு நடுவே நல்ல நம்பிக்கை இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.