சச்சின் தோனி.. யாரும் இங்க இந்த விஷயத்தில் ஸ்பெசல் கிடையாது – ரெய்னாவுக்கு உத்தப்பா எதிர் கருத்து

0
664
Uthappa

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு பெரிய ஜாம்பவான் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்கள். இந்த நிலையில் இது சம்பந்தமாக சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்த ஒரு கருத்துக்கு ராபின் உத்தப்பா எதிர்க்கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தங்கள் ஓய்வு பெறுவதற்கு இதுவே மிகச்சிறந்த தருணம் என்று அறிவித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரர்களாக இருக்கும் இவர்களுக்கு சச்சின் மற்றும் தோனிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த ஒரு மிகப்பெரிய கௌரவத்தை செய்ய வேண்டும் என சுரேஷ் ரெய்னா கேட்டிருந்தார். தற்பொழுது இதுதான் விவாதம் ஆகிக் கொண்டு வருகிறது.

சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் வைத்த பொழுது அதில் “சச்சின் மற்றும் தோனி இருவரின் ஜெர்சி எண்கள் 10 மற்றும் 7 ஆகியவற்றுக்கு ஓய்வு கொடுத்து கௌரவித்ததைப் போல, விராட் கோலியின் 18ம் நம்பர் மற்றும் ரோகித் சர்மாவின் 45 ஆம் நம்பர் ஆகியவற்றுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். இது அந்த சிறந்த வீரர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

தற்போது இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ராபின் உத்தப்பா கூறும் பொழுது “நீங்கள் ஜெர்சி எண்களுக்கு ஓய்வு கொடுக்க ஆரம்பித்தால், கடைசியில் இளம் வீரர்களுக்கு தேவையான எண்களே இருக்காது.ஏற்கனவே அவர்கள் 10 மற்றும் 7ம் எண்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். எனவே தற்போது இந்த எண்களை ஒரு வீரர் பெற விரும்பினால் பெற முடியாது. இது சரியான அணுகுமுறை கிடையாது. புகழ்பெற்ற வீரர் ஒருவரின் ஜெர்சி நம்பரை பெறுவதற்கு தகுதியான வீரர் யாராவது வந்தால் அவர்களுக்கு அதைக் கொடுக்க வேண்டும். இதுதான் சரியான ஒன்றாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : கில்லின் இளம் படையை சாய்க்க.. தென்னாப்பிரிக்க முக்கிய வீரரை தூக்கி.. ஜிம்பாப்வே மாஸ்டர் பிளான்

தற்பொழுது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இரண்டு முன்னாள் நட்சத்திர வீரர்களும் வெவ்வேறு கருத்துக்களை கூறியிருப்பதும், மேலும் இது இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரர்கள் சம்பந்தப்பட்டது என்பதாலும், தற்போது சமூக வலைதளத்தில் யார் சொல்வது சரி என இரண்டு தரப்பிலும் ரசிகர்கள் பெரிய அளவில் விவாதங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -