இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி வருகிறது 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற உள்ளது. இரு அணியின் பந்துவீச்சுத் துறைகளும் வலுவாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் மிக தீவிரமான முறையில் தயாராகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா குறித்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முக்கியமான டெஸ்ட் தொடரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பாரடர்கள் பாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா மைதானங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரண்டு அணி வீரர்களும் வேக பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவதற்காக தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளரான பும்ரா உலக அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.
பேட்டிங்க்கு சாதகமான மைதானமாக இருந்தாலும் சரி, பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக இருந்தாலும் சரி எப்போதுமே தனது தனித்திறமையால் பேட்ஸ்மேன்களை தடுமாற்றத்திற்கு உள்ளாக்கச் செய்வார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா பும்ரா பந்தை ரிலீஸ் செய்யும் விதம் மற்ற பந்துவீச்சாளர்களோடு ஒப்பிடுவையில் வேறுபட்டு இருப்பதால் அதை எதிர்கொள்வது கடினமாக இருக்கிறது என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பும்ராவுக்கும் மற்ற பவுலருக்கும் இடையே வேறுபாடு
இதுகுறித்து அவர் கூறும் போது “நீங்கள் முதலில் பும்ராவை எதிர்கொள்ளும்போது கவனிக்க கூடிய செயலாக இருப்பது அவர் பந்தை ரிலீஸ் செய்யும் விதம் மற்ற பந்துவீச்சாளர்களை விட வினோதமாக வித்தியாசமாக இருக்கும். அவரது ரிலீஸ் பாயிண்ட் சற்று மேலே இருக்கும். நிறைய வீரர்கள் க்ரீசின் அருகில் இருந்து பந்தை வெளியிடுவார்கள். ஆனால் பும்ரா தனது முன் காலுக்கு சற்று வெளியே வந்து பந்தை வெளியே தள்ளுவது போன்று உணர்கிறேன்.
இதையும் படிங்க:கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு.. ஒரே போட்டியில் ஐசிசி விதியை மீறிய 2 அணிகள்.. பாகிஸ்தான் ஆஸ்திரேலியா டி20 தொடர்
பின்னர் நாம் எதிர்பார்க்கும் நேரத்தை விட பந்து விரைவாக வந்தடையும். ஆனால் இதற்கு பழகிவிட்டால் பிரச்சனை இருக்காது. நான் அவருக்கு எதிராக நிறைய முறை விளையாடி இருக்கிறேன். முதல் பந்தில் எனக்கு அவுட் கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது, அது யாராலும் முடியும். நீங்கள் முதன்முதலாக பும்ராவை எதிர்கொள்ளும் போது கடினமாக இருக்கும்.ஆனால் நீங்கள் ஒரு ரிதத்திற்கு வரும்போது நன்றாக பழகிவிடும். ஆனால் அவர் இன்னும் ஒரு கிளாஸ் பிளேயர் தான்” என்று கூறி இருக்கிறார்.