மதியம் 4 மணி துபாய்.. காலை 7.30 மணி பாகிஸ்தான்.. எங்கள பார்த்தா எப்படி இருக்கு? – டேவிட் மில்லர் கோபம்

0
1143
Miller

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஐசிசி அட்டவணைகள் மிகவும் மோசமாக இருப்பதாக தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்திய அணி ஒரே இடத்தில் விளையாடுவது மட்டும் இல்லாமல், மற்ற அணிகளுக்கு பயண அட்டவணை மோசமாகவும் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது செமி பைனல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டைக்கு தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்க அணிக்கு டேவிட் மில்லர் அதிரடியாக அடித்த சதம் மட்டுமே ஆறுதலாக அமைந்தது.

- Advertisement -

அட்டவணையில் நடந்த பெரிய குழப்பம்

இந்தியா நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றில் தங்களுடைய கடைசிப் போட்டியை சில நாட்களுக்கு முன்பாக துபாய் மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் துபாய் மைதானத்திற்கு வந்தன.

ஏனென்றால், இந்திய அணிக்கு எதிராக செமி பைனலில் துபாய் மைதானத்தில் விளையாடுவார்கள் என்பது, இந்தியா நியூசிலாந்து போட்டிக்கு பிறகு தெரியும் என்பதாலும், இந்தியா நியூசிலாந்து போட்டி முடிந்த ஒருநாள் கழித்து செமி பைனல் ஆரம்பிப்பதாலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே துபாய் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் செமி பைனலில் மோத, தென் ஆப்பிரிக்க அணி அவசரமாக கிளம்பி பாகிஸ்தான் சென்றது. ஐசிசி-யின் இந்த அட்டவணை பலரையும் கோபப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இது சரியானது கிடையாது

இது குறித்து டேவிட் மில்லர் பேசும்பொழுது ” இந்தியா நியூசிலாந்து போட்டி நடைபெற்று கொண்டு இருந்த அன்று மாலை 4 மணிக்கு நாங்கள் துபாய் வந்தோம். அந்தப் போட்டி முடிவடைந்ததும் நாங்கள் நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என்று தெரியவந்தது. உடனடியாக நாங்கள் அடுத்த நாள் காலை அங்கிருந்து 7:30 மணிக்கு கிளம்பி பாகிஸ்தான் சென்றோம். இந்த அட்டவணை உண்மையில் சரியாக இல்லை. எங்களுக்கு போட்டிக்குப் பிறகு தயாராவதற்கு நேரமே கிடையாது. இது சரியானது இல்லை”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி கேலி கூத்தானது.. இந்தியாவுக்கு மட்டுமே சாதகம்.. சிரிப்பு வருது – டேவிட் லாயிட் விமர்சனம்

“தற்போது இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் இந்தியா நியூசிலாந்து அணிகள் நம்ப முடியாத அளவுக்கு சிறந்த அணிகள். அவர்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை உலகுக்கு காட்டி இருக்கிறார்கள். மேலும் அவர்கள் சில ஆண்டுகளாக நல்ல கிரிக்கெட் விளையாடுகிறார்கள். மேலும் சில நல்ல தீவிரமான வீரர்களையும் பெற்றிருக்கிறார்கள். எனவே இவர்கள் மோதிக் கொள்ளும் போட்டி சிறந்த போட்டியாக அமையும்” என்று கூறியிருக்கிறார்..

- Advertisement -