சாம்பியன்ஸ் டிராபி கேலி கூத்தானது.. இந்தியாவுக்கு மட்டுமே சாதகம்.. சிரிப்பு வருது – டேவிட் லாயிட் விமர்சனம்

0
80
David

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகப்பெரிய சாதகங்கள் கிடைத்து வருவது கேலிக்கூத்தானது எனவும் இது முட்டாள்தனமாக இருக்கிறது என்றும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்லவில்லை. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்தது. அப்பொழுது எந்த ஒரு முன்னாள் வீரர்களும், இந்நாள் வீரர்களும் இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

செமி பைனலுக்கு முன்பாக நடந்த குழப்பம்

இந்தியா நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றில் கடைசி போட்டியில் துபாய் மைதானத்தில் விளையாடிய பொழுது, அதற்கு அடுத்து ஒருநாள் இடைவெளியில் இந்திய அணி செமி பைனலில் விளையாட வேண்டி இருந்தது. எனவே இந்திய அணி உடன் மோதுவது யார் என்று தெரிய இந்த போட்டி முடிவுக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் நடுவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன.

இதன் காரணமாக இந்தியா நியூசிலாந்து போட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுதே பாகிஸ்தானில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டுமே துபாய் வந்து விட்டன. பிறகு இந்திய அணி வெல்லவும் ஆஸ்திரேலியா அணி செமி பைனலில் மோதுவதற்காக துபாயில் தங்கி விட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்து அணி உடன் புறப்பட்டு பாகிஸ்தான் சென்று இரண்டாவது செமி பைனல் விளையாட கிளம்பியது. இந்தக் குழப்பம் பெரிய விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

இதுவெல்லாம் கேலிக்கூத்தானது

இதுகுறித்து டேவிட் லாயிட் கூறும் பொழுது ” இது உலக கிரிக்கெட் நிகழ்வுகளில் மிகப்பெரிய நிகழ்வு ஆகும். ஆனால் இந்தத் தொடருக்கான ஏற்பாடுகள் மிகவும் கேலிக்கூத்தானது. எனக்கு இதை யோசித்தாலே சிரிப்புதான் வருகிறது வார்த்தை வரவில்லை. இது வெறும் முட்டாள்தனம் இதை எப்படி விவரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை”

இதையும் படிங்க : தோனி சிறந்தவர்தான்.. ஆனா அதைவிட சிறந்தவர் விராட் கோலி.. காரணம் இதான் – கபில்தேவ் பேச்சு

“இரண்டு அணிகள் கிளம்பி துபாய் போகின்றன. அந்த இரண்டு அணிகள் அங்கு அரை இறுதி விளையாடினாலும் விளையாடலாம், இல்லை அங்கிருந்து கிளம்பி பாகிஸ்தான் போய் விளையாட வேண்டியது இருக்கும் என்ற சூழ்நிலை எப்படிப்பட்ட முட்டாள்தனம்? உண்மையில் நான் நகைச்சுவையானவன். என்னால் இதற்கு சிரிக்க முடியும். ஆனால் விளையாடும் வீரர்கள் இந்த சம்பவத்திற்கு நிச்சயம் சிரிக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -