தெ.ஆ ODI T20i சீரிஸ் இந்திய அணி அறிவிப்பு.. சாய் சுதர்சன் சாம்சன் பலருக்கு வாய்ப்பு.. அதிரடி முடிவுகள்!

0
6780
ICT

இந்திய அணி டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. இந்தச் சுற்றுப் பயணத்திற்கான மூன்று வடிவ தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 10, 12, 14, ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் இரண்டு அணிகளிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு காரணமாக விளையாடவில்லை. மேலும் பும்ராவும் விளையாடவில்லை.

இதில் டி20 கிரிக்கெட் அணியை சூரியகுமார் யாதவ் வழிநடத்துகிறார். ஒரு நாள் கிரிக்கெட் அணியை கேஎல்.ராகுல் வழிநடத்துகிறார். ஹர்திக் பாண்டியா காயம் குணமடையவில்லை என்று தெரிகிறது.

டி20 கிரிக்கெட் அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் தீபக் சகர் இருவரும் மீண்டும் வந்திருக்கிறார்கள். ஒருநாள் கிரிக்கெட் அணியில் ஆச்சரியப்படுத்தும் விதமாக தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன், மத்திய பிரதேச வீரர் ரஜத் பட்டிதார், சாம்சன், மற்றும் அனுபவ வீரர் சாகல் ஆகியோர் திரும்ப வந்திருக்கிறார்கள். இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் தரப்படவில்லை. அதே சமயத்தில் ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

மேலும் டி20 அணிக்கு துணை கேப்டனாக ஆச்சரியப்படுத்தும் விதமாக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். டி20 உலக கோப்பையில் இந்த முறை ரவிந்திர ஜடேஜா விளையாடுவார் என்று தெரிகிறது.

3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கே), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (வி. கீ), ஜிதேஷ் சர்மா (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சஹர்.

3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (சி) (வி.கீ.), சஞ்சு சாம்சன் (வி.கீ.), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.