தெஆ 64 ஆண்டு ரெக்கார்ட்.. 19 வயது வீரரின் அசத்தல்.. சிஎஸ்கே பிரிவிஸ் டெஸ்டில் டி20 பேட்டிங்.. முதல் டெஸ்ட்

0
441
SA

இன்று ஜிம்பாப்பே அணிக்கு எதிராக தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் லுகான் ட்ரே பிரட்டோரியஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து 64 ஆண்டு கால தென் ஆப்பிரிக்க சாதனை ஒன்றை முறியடித்திருக்கிறார்.

தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் டென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடுகிறது. மேலும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் சேர்த்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கே பிரிவிஸ் அதிரடி

தென் ஆப்பிரிக்க அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. இந்த அணியை கேசவ் மகாராஜ் வழி நடத்துகிறார். இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மேலும் முதல் 55 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் உள்ளே வந்த தென் ஆப்பிரிக்க இளம் வீரர் மற்றும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் டிவால்ட் பிரிவிஸ் அதிரடியாக விளையாடி 41 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரின் அதிரடி பேட்டிங் சரிவில் இருந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது.

- Advertisement -

64 ஆண்டு சாதனை

இதைத்தொடர்ந்து ஒரு முனையில் தனது அறிமுக போட்டியில் விளையாடிய லுகான் ட்ரே பிரட்டோரியஸ் அரைசதம் அடித்தார். மேலும் 1964ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வீரர் கிரேம் பொல்லாக் டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் அரைசதம் அடித்திருந்த சாதனையை முறியடித்தார். மேலும் தொடர்ந்து நின்று சிறப்பாக விளையாடி சதம் அடித்து 160 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 153 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : ரன்களை வாரி வழங்கிய வள்ளல் பிரசித் கிருஷ்ணா.. அடுத்த டெஸ்டில் பாருங்க.. கேலி, கிண்டலுக்கு பதிலடி

தற்போது தென் ஆப்பிரிக்க அணி 73 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் 150 ரன்னில் சுருண்டு விடும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி மீண்டு வந்திருக்கிறது.

- Advertisement -